Tenkasi

News February 24, 2026

கோவிந்தபேரி பகுதியில் அவசர மின்தடை அறிவிப்பு

image

கடையம் பிரிவிற்குட்பட்ட கோவிந்தபேரி அருகே சேதமடைந்த மின்கம்பம் சரி செய்யும் பணி மற்றும் மரம் வெட்டும் பணிகள் இன்று (பிப்ரவரி 24) நடக்கிறது. இதனால் காலை 09:30 மணி முதல் 02:00 மணி வரை பிள்ளை குளம், மந்தியூர் மீனாட்சிபுரம், ராஜாங்கபுரம், கோவிந்த பேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 24, 2026

தென்காசி: NO EXAM.. ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE

News February 24, 2026

தென்காசி: உடும்பு வேட்டையில் ஈடுபட்டவர் கைது

image

தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் வேட்டையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் உடும்பு வேட்டை நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குளம் வனத்துறையினர் சோதனைகள் மேற்கொண்டதில் ஐந்தாம்கட்டளை பகுதியை சார்ந்த காசி என்பவர் உடும்பு வேட்டையாடியது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

News February 24, 2026

தென்காசி: பைக் மோதி விவசாயி பலி

image

கடையநல்லூர்-முத்துசாமிபுரத்தை சேர்ந்த விவசாயியான உடையார் சாமி நேற்று முன் தினம் மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது திரிகூடபுரம் நோக்கி சென்ற பைக் இவரது மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கடையநல்லூர் GH-ல் சேர்க்கப்பட்டார். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சுகைல் என்பவரை கைது செய்தனர்.

News February 23, 2026

தென்காசி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <>க்ளிக் <<>>செய்து ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

தென்காசி : உங்களுக்கு 2026 ஓட்டு இருக்கா? இல்லையா? CLICK..!

image

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய இனி அலைய வேண்டியதில்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து, ECINET செயலியில் உங்கள் வாக்காளர் எண்ணைப் பதிவு செய்தால் உங்க பாகம் எண் மற்றும் எங்க போயி ஓட்டு போடனும் உடனே வந்தும். உங்கள் குடும்பத்தினர் விவரங்களையும் இதிலேயே சரிபார்த்துக்கொள்ள முடியும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

BREAKING: தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்த கலெக்டர்…!

image

கன்னியாகுமரி அய்யா வைகுண்டசாமியின் 194வது அவதாரத் திருவிழாவையொட்டி தென்காசியில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மார்ச்.8ம் தேதி பொதுத்தேர்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும் அறிவிப்பு. தென்காசியில் மார்ச் 4ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ம் தேதி வேலை நாள் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News February 23, 2026

தென்காசி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

image

தென்காசி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News February 23, 2026

தென்காசியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்

1.தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689

2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310

3.Toll Free 1800 4252 441

4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126

இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 23, 2026

தென்காசி: கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு.!

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கம்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் குட்டித்தாய் (58). இவர் நேற்று அங்குள்ள ஒரு கிணற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கடையநல்லூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!