India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேவேந்திரகுல சமுதாயம் சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நேற்று(நவ.29) நடைபெற்றது. விழாவிற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு திறந்துவைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்றார்.
தென்காசி மாவட்ட குற்றப்பதிவு துறையின் துணை கண்காணிப்பாளராக சாந்தமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்த நிலையில், தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என நேற்று(நவ.29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி ஃபார்ம், டி ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க நவ.,30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் டிச.,5 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே, 22 கிலோ கஞ்சா கடத்திய ராமச்சந்திரன் என்பவருக்கு பத்தாண்டு சிறையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 1 கிலோ கஞ்சா வைத்திருந்த மகேந்திரன் என்பருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம். கட்ட தவறினால் 2 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
தென்காசி உட்கோட்டத்துக்குட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று(நவ.29) இரவு 10 மணி முதல் நவ.30 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும். அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.29) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நல வாரியத் திட்டத்தின் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் உறுப்பினராக சேர்வதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் டிச.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(நவ.29) கேட்டுக்கொண்டார்.
தேவேந்திர குல வேளாளர் ஆதிதிராவிடர்(பறையர்) மக்களுக்கு 3 சதவீதம் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி மாபெரும் கருத்தரங்கம் டிசம்பர் 6 ,7 ,8 ஆகிய தேதியில் நடக்கிறது. இதனை வரவேற்று புளியங்குடியில் இன்று(நவ.29) புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டிருந்த வாக்காளர் சேர்ப்பு, திருத்த முகாம் 28 நவம்பர் வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில், விண்ணப்பங்களுக்கான பரிசீலனை டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 6 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயகிரியில் ஏற்கனவே இருந்த டாஸ்மாக் கடை அரசியல் கட்சிகள், பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் மது கடையை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் நேற்று(நவ.,28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பேரூர் செயலாளர் சேவக பாண்டியன் தலைமையில், சிபிஐ நகர செயலாளர் சின்ன வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.