Tenkasi

News December 4, 2024

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டம்பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் ஔவையார் விருதுக்காக விண்ணப்பிக்கலாம். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர் அவ்வையார் விருது பெற <>https://awards.tn.gov.in<<>> இணையதளம் வழியாக 31.12. 2024க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

ஆலங்குளம் அருகே கலைஞர் அறிவாலயம் கட்ட பூமி பூஜை

image

ஆலங்குளம் அருகே கீழப்பாவூரில் திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டுமான பணி பூமி பூஜை இன்று(டிச.,4) நடந்தது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், பேரூர் செயலாளர் ஜெகதீசன் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் மாவட்ட பிரதிநிதி பொன்.செல்வன், சீனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், பொன்.அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News December 4, 2024

தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் தலைமையில் ஆய்வு

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், எஸ்பி ஶ்ரீனிவாசன் முன்னிலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலன்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தூய்மைப்பணியாளர்களின் ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்கள் நலன் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

News December 4, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று(டிச2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

தென்காசி பத்திர பதிவு அலுவலங்களில் கூடுதல் டோக்கன்

image

வருகிற டிசம்பர் 5ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்ய அதிகமானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் பத்திர பதிவு செய்ய கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திர பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள புதூர், வடகரை அச்சன்புதூர், கீழப்பாவூர், சிவகிரி, ராயகிரி, இலஞ்சி மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 78 நபர்கள் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் அளித்து அரசு பணி பெற்றதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்து இன்று அதிரடியாக 78 பேரை பணி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News December 3, 2024

தென்காசி: மருத்துவ சிகிச்சைக்காக ரயிலில் சென்றவர் மரணம்

image

தென்காசி மாவட்டத்தை சார்ந்த அஜித்குமார்(29) கால்களில் வீக்கம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு நேற்று முன்தினம்(டிச.,1) பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், சங்கரன்கோவில் இருந்து ஏறினார். இந்நிலையில், விழுப்புரத்தில் மாற்று ரயில் மூலம் ஏறி சென்றபோது மயக்கம் அடைந்து ரயிலில் உயிரிழந்தார். இது குறித்து எக்மோர் போலீசார் நேற்று காலை உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

News December 3, 2024

தட்டுப்பாடின்றி உரம் விநியோகிக்க எம்எல்ஏ அறிவுறுத்தல்!

image

தென்காசி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உரங்கள் தட்டுப்பாடு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, பாக்ட் நிறுவன விற்பனை பொது மேலாளர் ஜிதேந்திரகுமாரை தொடர்பு கொண்டு உரங்களை தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்யுமாறு நேற்று கேட்டுக் கொண்டார்.

News December 3, 2024

ரூ.50,000 அபராதம் FINE: தென்காசி உதவி ஆணையர் எச்சரிக்கை

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் 62 வணிக நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதோடு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், எடையளவு கருவிகளை பரிசோதனை செய்து வைக்குமாறும், தவறும் பட்சத்தில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருவள்ளுவன் நேற்று(டிச.,2) தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

தென்காசி: பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 16 கடைசி நாள்

image

தென்காசி மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2024-2025 ஆண்டுக்கான, ரவி பருவம் நெற்பயிர்களுக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.534 ப்ரீமியம் செலுத்தி, பயிர்களுக்கான காப்பீடு செய்துகொள்ள தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பவர் 16 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் கொடுக்கப்படுகிறது.

error: Content is protected !!