Tenkasi

News December 6, 2024

சங்கரன்கோவில், கடையம், புளியங்குடி பகுதியில் பவர் கட்!

image

புளியங்குடி, வீரசிகாமணி, சங்கரன்கோவில் & கடையம் பகுதியில் நாளை(டிச.,7) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் புளியங்குடி வட்டாரத்தில் சிந்தாமணி, அய்யாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், சங்கரன்கோவில் வட்டாரத்தில் களப்பாகுளம், வாடிகோட்டை, சோலைசேரி சுற்றுப் பகுதிகளிலும், கடையத்தில் கீழ கடையம், சேர்வைக்காரன் பட்டி, முதலியார்பட்டி பகுதியிலும் காலை 9 மணி – மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். SHARE IT.

News December 6, 2024

மாநில சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவருக்கு வரவேற்பு

image

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று(டிச.,5) வருகை தந்த திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளரும், மாநில சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவருமான இறையன்பு குத்தூஸை தென்காசி நகர் மன்ற தலைவரும், தென்காசி நகர திமுக செயலாளருமான சாதிர் தலைமையில் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

News December 6, 2024

தென்காசி ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் இன்று (டிச.5) இரவு 10 மணி முதல் நாளை (டிச.6) காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2024

இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று (05.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே கமல் கிஷோர் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இராமநதியில் இருந்து பசலி பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News December 5, 2024

கடையம் ராமநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

image

கடையம் அருகே உள்ள ராமநதி அணையிலிருந்து பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இன்று(டிச.,5) தண்ணீர் திறந்து வைத்தார். ராமநதி பாசன திட்டத்தின் கீழுள்ள வடகால், தென்கால், பாப்பான்கால் மற்றும் புதுக்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு இராமநதி நீர்த் தேக்கத்திலிருந்து 117நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

News December 5, 2024

தென்காசியில் டிசம்பர் 14 தேசிய நீதிமன்றம்

image

தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் முதல் வட்ட நீதிமன்றங்கள் வரை தேசிய நீதிமன்றம் நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களுக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நிலுவை அசல் வழக்குகள், மோட்டார் வழக்குகள், குடும்ப விளக்குகள் மேலும் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.

News December 5, 2024

தென்காசி: 5 உலக சாதனை படைத்த 7 மாத குழந்தை!

image

தென்காசியை சேர்ந்த லயா என்ற பெண் குழந்தை 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளது. தற்போது இந்த குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. குழந்தையின் நுண்ணறிவு திறனை பாராட்டி நேற்று(டிச.,4) தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அவர்களும் தற்போது குழந்தையை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பெற்றோருக்கு நுண்ணறிவு திறனை மேலும் வளர்ப்பதற்கான அறிவுரையும் வழங்கினார். SHARE IT.

News December 5, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் டிச.4 இரவு 10 மணி முதல் டிச.5 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 9884042100 என்ற எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2024

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவான் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் அனைத்து புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற முகாமில் புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார்.

News December 4, 2024

பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற திங்கள் (9.12. 2024) தேதி காலை 9:00 மணி முதல் 4:00 மணி வரை தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையம் நடைபெற உள்ளது. முகாமில் ஐடிஐ 2 ஆண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!