Tenkasi

News December 9, 2024

தென்காசியில் ராணுவ வீரர்கள் நலச் சங்க ஆண்டு விழா

image

தென்காசியில் மாவட்ட ஜெய் ஜவான் ராணுவ வீரர்கள் நலச்சங்க ஆண்டு விழா நேற்று(டிச.,8) நடைபெற்றது. இலஞ்சி சாரதாம்பா அரங்கில் நடந்த விழாவிற்கு கர்னல் ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் கேப்டன் சமுத்திரவேல் வரவேற்றார். தென்காசி பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் சுந்தர்ராஜ் சிறப்புரையாற்றினார். ராணுவ வீரர்கள் நல மையம் ராணுவ கேண்டின் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News December 8, 2024

தென்காசி மாவட்ட காவல் ரோந்து பணி விபரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (டிச.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

தென்காசி கனிம வளத்துறை உதவி இயக்குனர் அதிரடி இடமாற்றம்

image

தென்காசி மாவட்டம் தென்காசி கனிமவளத்துறை உதவி இயக்குனராக வினோத் என்பவர் பணியாற்றி வந்தார். தென்காசி மாவட்டத்தில் கனிமவளக் குவாரியில் பிரச்சனைகள் இருந்து வந்ததைத் தொடர்ந்து இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிரடியாக வினோத் நீலகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதில் ஈஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News December 8, 2024

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

image

தென்காசி மாவட்டம் குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் ராமநாதன் என்ற ரமேஷ்(45). இவர் மின்வாரிய வயர்மேனாக பணி புரிந்து வருகிறார். இன்று காலை அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் பீஸ் போடும் போது எதிர்பாராதவிதமாக மின் சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2024

2027 பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் எய்ம்ஸ் – RTI தகவல்

image

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவரான பாண்டியராஜா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு வருகிற 2027 பிப்ரவரி முதல் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் அறியும் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது.

News December 8, 2024

வீட்டை பூட்டி வெளியூர்செல்பவர்கள் கவனத்திற்கு

image

தென்காசி மாவட்டத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கொள்ளை அடித்து வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு தென்காசி மாவட்ட காவல்துறை இன்று(டிச.08) விழிப்புணர்வு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கொள்ளை தடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

News December 8, 2024

தென்காசி மாவட்டத்தில் டிச.12ல் கடன் வழங்க சிறப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நேற்று(டிச.07) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன் ஆகிய கடன்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

News December 8, 2024

எழில் வாணன் எழுதிய நூலை முதல்வர் வெளியிட்டார்

image

ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாவட்ட கலைப்பிரிவு நிர்வாகி எழில்வாணன். இவர், “அவர் தான் கலைஞர்” என்ற நூலை எழுதியுள்ளார். இதனை நேற்று சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார். இதில் இளங்கோவன் ,ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News December 8, 2024

கடையநல்லூர் பகுதியில் நகை தொலைத்தவருக்கு அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மெயின் ரோடு பகுதியில் HP பெட்ரோல் நிலையத்தின் அருகில் நேற்று (டிச.7) தங்க நெக்லஸ் (மாலை) கண்டெடுக்கப்பட்டு கடையநல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொலைத்தவர்கள் சரியான அடையாளத்தை கூறி பெற்றுக்கொள்ளவும். மேலும் டிஎன்டிஜே கடையநல்லூர் பேட்டை கிளை தொடர்பு எண் 9344933787- தொடர்பு கொள்ளலாம். புகைப்படத்தில் மறைக்கப்பட்ட நகை விவரம் கொடுக்கப்பட்டுள்ளது

News December 7, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (டிச.7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!