India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.

தென்காசி மக்களே, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

தென்காசி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தென்காசி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

சிவகிரியில் நேற்று அம்பேத்கர் முழு உருவச் சிலையை விசிக தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும். வாய்ப்பு கொடுத்தால் தென்மாவட்டங்களில் போட்டியிடுவோம் எனவும், கூடுதல் தொகுதிகள் கேட்கப்போவதாகவும் கூறினார். மேலும் OPS வருகையால் தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி வலுப்பெறும் எனவும், விஜய் வருகையால் எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (65). மளிகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். உடனே அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (30). இவர் ஆலங்குளம் பஜார் பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். திருமணம் ஆகவில்லை. வியாபாரத்தில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷம் குடித்து மயங்கிய அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில், இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (28/02/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான மின் குறைதீர்கூட்டம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 10ம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 13-ம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் 20 ம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு தொடங்கும் என மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.