Tenkasi

News December 12, 2024

தென்காசி பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

image

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தென்காசி மாவட்டத்திற்கு தற்போது 1 மணியளவில் வானிலை மையம் மூலம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து இன்று(12.12.2024) நண்பகலிற்கு மேல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். SHARE IT.

News December 12, 2024

தென்காசி மாவட்டத்திற்கு ‘RED ALERT’!

image

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று(டிச.,12) அதி கனமழைக்கான ‘RED ALERT’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி, சென்னை, காவிரி படுகை பகுதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால், காலை முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT

News December 12, 2024

புளியரை: என்னத்த சொல்லுங்க..நாங்க இப்படித்தான்!

image

தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதே போன்று கனிம வளங்களை இறக்கிவிட்டு வரும் வாகனங்களும் ஆங்காங்கே ஒதுக்கி விடப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த ஆங்காங்கே ‘NO’பார்க்கிங் போர்டு வைத்தாலும், அதையும் மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

News December 12, 2024

தென்காசி: ஊராட்சி தலைவர்கள் டெல்லி பயணம்

image

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 7 ஊராட்சி மன்ற தலைவர்கள் டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். வீராணம் – வீரபாண்டியன், கீழக் கலங்கல் சந்திரசேகர், குறிப்பன்குளம் – சுப்பிரமணியன், அச்சங்குன்றம் – வெங்கடேஸ்வரி, நெட்டூர் – ராஜேஸ்வரி, அகரம் கருப்பசாமி, மாறாந்தை – மீனா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று(டிச.,12) டெல்லிக்கு சென்றனர்.

News December 12, 2024

ஆழ்வை: ஔவை ஆசிரமத்தில் மகளிர் ஆணைய தலைவி ஆய்வு

image

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள சிவசைலம் ஔவை ஆசிரமத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேற்று(டிச.,11) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடி அங்கு செயல்படுத்தப்படும் கல்வி கட்டமைப்புகள் குறித்து கலந்துரையாடினார். மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா, ஔவை ஆசிரமம் துணை தாளாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News December 12, 2024

தென்காசி: கனிம வளத்துறை உதவி இயக்குநர் இடமாற்றம்

image

தென்காசி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநராக பணியாற்றிய வினோத் நீலகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் பணியாற்றிய ஈஸ்வரன் தென்காசி கனிம வளத்துறை உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரும் பொறுப்பேற்பதற்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நெல்லை கனிமவளத் துறை உதவி இயக்குர் பாலமுருகன் தென்காசி பொறுப்பு உதவி இயக்குநராக நியமனம்.

News December 12, 2024

தென்காசியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(டிச.,12) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT.

News December 11, 2024

கபீர் புரஸ்கார் விருது: டிச.,15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழக முதல்வரால் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது கபீர் பிரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. சாதனை புரிந்த ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்பு துறையினர் இந்த விருந்து பெற தகுதியானவர்கள் awardstn.gov.in என்ற இணையதளத்தில் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News December 11, 2024

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

image

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்று (டிச.11) வெளியாகியுள்ளது. அதில் மல்லிகிலோ ரூ.2000, பிச்சிப்பூ கிலோ ரூ.800, சம்பங்கி கிலோ ரூ.160, கேந்தி கிலோ ரூ.80, சேவல் கிலோ ரூ.60, கனகாம்பரம் கிலோ ரூ.1000, ரோஸ் கிலோ ரூ.300, செவ்வந்தி கிலோ ரூ.160, மரிக்கொழுந்து கிலோ ரூ.60, தாமரை 1க்கு ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

News December 11, 2024

தென்காசியில் ஐயப்பன் திரு ஆபரண பெட்டிக்கு வரவேற்பு!

image

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் மஹோற்சவ விழாவை முன்னிட்டு, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து 33-வது ஆண்டாக எடுத்துவரப்படும் திரு ஆபரண பெட்டிக்கு தென்காசியில் டிசம்பர் 15 ஆம் தேதி வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் ஹரிஹரன், செயலாளர் மாடசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!