Tenkasi

News December 13, 2024

தென்காசி: 10 மணி நேரத்தில் 1884 மி.மீ. மழை பதிவு!

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று(டிச.,13) காலை வெளியிட்டுள்ள தகவலில், மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8.30 மணி முதல் அதிகாலை 6.30 மணி வரை 10 மணி நேரத்தில் சுமார் 1884 மில்லி மீட்டருக்கு மேலாக வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவாகும். நேற்று தொடர்ந்த மழை இன்றும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 13, 2024

சுரண்டை அருகே வீடு இடிந்து 3 பேர் காயம்!

image

சுரண்டை நகராட்சி ஆலடிப்பட்டியை சேர்ந்த அந்தோணி என்பவரது வீட்டின் ஒரு பகுதி, நேற்று(டிச.,12) இரவு பெய்த மழையில் திடீரென உடைந்து விழுந்தது. இந்த விபத்தில், வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் கணேசன்(40) மற்றும் அவரது மனைவி பார்வதி(37) மற்றும் அவர்களது குழந்தை லேசான காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

News December 13, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 13, 2024

தென்காசி மாவட்டத்தில் பெய்த மழைப்பொழிவு அளவு

image

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை 13மணி நேரத்தில் 401 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளதாக செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையிலேயே இன்று அதிகாலையில் இருந்து பெய்த மழையின் அளவு அதிகமாக இருக்கிறது. கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 13, 2024

தென்காசி உதவி எண்கள் கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் இன்று (டிச.12) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 7790019008 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 04633 – 290548 என்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கால எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

நாளை பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை

image

தென்காசி சிஇஒ இன்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள் (Govt ,Govt aided ,Matric schools,Cbse school) நாளை 13 ம் தேதி அதிக கன மழை காரணமாக விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த விதமான பள்ளிகளும் எக்காரணத்தைக் கொண்டும் இயங்கக் கூடாது என அறிவிக்கப்படுகிறது. மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை” என தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

தென்காசி ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் டிச.12 இரவு 10 மணி முதல் டிச.13 காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் -ஆட்சியர்

image

“தென்காசி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பிரச்னைகள் வரும்போது உரிய நேரத்தில் தீர்வு காண அனைத்து அதிகாரிகளுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக” மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தற்போது தெரிவித்துள்ளார் .

News December 12, 2024

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

image

தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் மிக கனமழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக நாளை(டிச.13) மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க மக்களே

News December 12, 2024

கனமழைக்கான முன்னேற்பாடு கலெக்டர் ஆலோசனை

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (12.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அதிக கனமழைக்கான அறிவிப்பு வரப்பெற்றது தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு மழை சேதம் தடுப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

error: Content is protected !!