Tenkasi

News December 15, 2024

காய்ச்சல் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை அணுகவும்

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது இதனால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் காய்ச்சல் சளி இருப்பவர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(டிச.15) கேட்டுக்கொண்டார்.

News December 15, 2024

தென்காசியில் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி, சங்கரன்கோவில், நெடுஞ்சாலை மற்றும் காவல் ரோந்து பணியில் (டிச.14) இரவு 10 மணி முதல் (டிச.15) காலை 6 மணி வரை ஈடுபடும் அதிகாரிகள் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 100 – ஐ அழைக்கவும் அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2024

தென்காசிக்கு வருகை தரும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்

image

நாளை (15/12/2024) காலை 8 மணி அளவில் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள வருகின்றார். இதனால், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் இலத்தூர் விலக்கிற்கு வருகை தருமாறு தென்காசி தென்மாவட்ட திமுக கழகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

பேரிடர் மீட்பு குழுவுடன் அமைச்சர் ஆலோசனை

image

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள பேரிடர் மீட்பு குழுக்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சந்தித்து ஆய்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் உடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அலுவலர்கள் இருந்தனர்.

News December 14, 2024

குமரி விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. இதனை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

News December 14, 2024

தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட மழையின் அளவு

image

தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்ததை தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று(டிச.13) மட்டும் பெய்த மழையின் அளவை இரண்டரை மணி நேரங்களாக பிரித்து மழை பொழிவின் அளவை குறிப்பிட்டுள்ளார். அதிகபட்சமாக கடனாநதி இராம நதி குண்டாறு நீர்த்தேக்க பகுதிகளில் அதிகமாக மழைப்பொழிவு பெய்துள்ளது என்று ஆட்சியர் அறிக்கை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாலையில் தென்காசி அநேக இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

News December 13, 2024

தென்காசி மாவட்ட கனமழை பேரிடரை ஆய்வு செய்த அமைச்சர்

image

தென்காசி மாவட்டத்தில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழக முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று (13.12.2024) தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

News December 13, 2024

தென்காசி கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு

image

நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூகளில் நாளை (டிச.14) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்ட கல்லூரிகளும் இந்த பல்கலை.யில் இணைவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. *உங்கள் பகுதி கல்லூரி மாணவர்களுக்கு பகிரவும்*

News December 13, 2024

பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தென்காசி வருகை

image

தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை பார்வையிட இன்று (டிச.13) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தென்காசி வருகை தந்தார். இதையடுத்து, அவரை முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி வரவேற்றார். 

News December 13, 2024

தென்காசியில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க மக்களே

error: Content is protected !!