Tenkasi

News December 19, 2024

தேசிய போட்டியில் தங்கம் வென்ற தென்காசி மாணவர்கள்!

image

டிசம்பர் 13 முதல் 15 வரை ஐதராபாதில் நடைபெற்ற 10-வது இந்திய அளவிலான ‘டோங் இல் மு டோ’ போட்டியில் தமிழக அணி சார்பாக தென்காசி மாவட்ட மாணவர்கள் 12 பேர் பங்கேற்றனர். இதில் காளீஸ்வரன் தங்கப்பதக்கம், ஜெய்பிரதீஷ் தங்கப் பதக்கம், ஹரேந்திர விபூஷ்ணு தங்கப் பதக்கம், விஷ்வா வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு உலக ‘டோங் இல் மு டோ’ தற்காகப்பு கலை நிறுவனர் ஜோன் ஹூ ஷியுக் பதக்கங்களை வழங்கினார்.

News December 19, 2024

உயர் கோபுரத்தில் ஏறி கண்காணித்த தென்காசி SP

image

தமிழக எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியின் தென்புறம் கனரக வாகனங்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் என்ன பொருட்கள் கொண்டு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் விதமாக உயர் கோபுரம் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென்காசி SP சீனிவாசன் இன்று கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

News December 19, 2024

குற்றாலத்தில் குளிக்க ஆட்சியர் அனுமதி

image

குற்றாலத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இன்று (டிச.18) ஆய்வு செய்தனர். பின்னர் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்ததை தொடர்ந்து ஆட்சியர் இன்று குளிக்க அனுமதி அளித்துள்ளார். ஷேர் செய்யவும்

News December 18, 2024

புளியரை சோதனை சாவடியில் எஸ்பி, கலெக்டர் ஆய்வு

image

கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் இன்று இரவு நேரத்தில் தென்காசி மாவட்ட கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

News December 18, 2024

அரசு அலுவலர்களுக்கான போட்டி அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் முதல்நிலை கொள்குறி வகை வினாத் தேர்வு 21 ஆம் தேதி பகல் 2 மணிக்கு மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது.போட்டியாளர்கள் அனைவரும் பிற்பகல் 1 மணிக்கு அடையாள அட்டையுடன் (நகல்) வருகை தர வேண்டும். போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் முன் பதிவு செய்ய கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

கல்குவாரி விபத்தில் தென்காசியை சேர்ந்தவர் பலி

image

நெல்லை மாவட்டம், இருக்கன்துறை கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் இன்று(டிச.18) மண் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 3 பேர் இந்த சரிவில் சிக்கினர். இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருள்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். காயமடைந்த நபர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News December 18, 2024

வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

image

தென்காசி மாவட்டம், வாக்குபதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., இன்று(டிச.18) வாக்கு இயந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக மற்றும் சிறந்த முறையில் இருக்கிறதா என்றும் பார்வையிட்டார்.

News December 18, 2024

பூலித்தேவர் வாரிசு தாரர்கள் அமைச்சர்களிடம் மனு!

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நெல்கட்டும்செவல் கிராமத்தில் மாமன்னர் பூலித்தேவர் வாரிசு தாரர்களுக்கு தியாகிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும்‌ மாமன்னர் பூலித்தேவர் மாளிகை என பெயர் வைக்க வேண்டும் என்றும் கோரி சென்னையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு & அன்பில் மகேஷ் ஆகியோரிடம் வாரி சுதாரர் துரை சூர்யபாண்டியன், மாரி பாண்டியன் ஆகியோர் மனு வழங்கினர்.

News December 18, 2024

கொல்லம் to செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

image

கொல்லம் – செகந்திராபாத் ரயில் டிச.,21 அன்று கொல்லத்திலிருந்து 5.00 மணிக்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக 6.00 மணிக்கு கிளம்பும். ஜன.,4 அன்று கொல்லத்திலிருந்து 5.00 மணிக்குப் பதிலாக 2 மணி நேரம் தாமதமாக 7.00 மணிக்கு கிளம்பும். வழியில் 65 நிமிட தாமதமும் அடங்கும். ஜன.,11 அன்று கொல்லத்திலிருந்து சரியான நேரமான 5.00 மணிக்குக் கிளம்பி மாற்று வழித்தடமான மானாமதுரை வழியே சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 18, 2024

பாவூர்சத்திரம் பாலப் பணிகளை விரைந்து முடிக்க MP வலியுறுத்தல்

image

நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று(டிச.,17) டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் நேரில் சந்தித்து நெல்லை மக்களவைத் தொகுதிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி, உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார். அதில் குறிப்பாக நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் உள்ள பாவூர்சத்திரம் ரயில்வே பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!