Tenkasi

News March 16, 2025

தென்காசி: பிரிந்த தம்பதியினைரை சேர்க்கும் ஆலயம்

image

தென்காசி, வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிவனும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். மூலவர் சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் விருட்சம் புளியமரம். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வந்து வேண்டினால் மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*

News March 16, 2025

தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் இன்றைய நிலவரம் 16.03.2025: கடனா: உச்ச நீர்மட்டம் 85 அடி, நீர் இருப்பு 62.40 அடி,ராமநதி: உச்ச நீர்மட்டம் 84 அடி, நீர் இருப்பு 52.50அடி,கருப்பா நதி :உச்சநீர் மட்டம் 72 அடி, நீர் இருப்பு 30.18அடி,குண்டாறு :உச்சநீர் மட்டம் 36.10,நீர் இருப்பு 27.50அடி,அடவிநயினார்: உச்சநீர் மட்டம் 132அடி, நீர் இருப்பு 38.00  அடியாக இருக்கிறது.

News March 16, 2025

தென்காசி: இந்திய ராணுவத்தில் சேர விருப்பமா?

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு இங்கே <>’க்ளிக்’<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தென்காசி, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்கள், நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

கடையநல்லூர்: திருமணம் தாண்டிய உறவால் கொலை!

image

தென்காசி, கடையநல்லூர் சவல் விலை 3வது தெருவை சேர்ந்த முருகன்(35) என்பவர் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, முருகன் மனைவி செல்வி யாருடனோ அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். அவர் கண்டித்தும் திருமணம் தாண்டிய உறவை மறுத்ததால் முருகன் கொலை செய்ததாக நேற்று(மார்ச் 15) வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.

News March 16, 2025

தென்காசி ரயில் நிலையம் அருகே சதிக்கல் கண்டெடுப்பு

image

இந்தியாவில் கணவர் இறந்தால் மனைவியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. உடன்கட்டை ஏறும் பெண்ணின் நினைவாக சதிக்கல் நடப்பட்டன. இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவ மாணவிகள் தென்காசி ரயில் நிலையம் அருகே நேற்று(மார்ச் 15) சதிக்கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சதிக்கல் 200 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.

News March 16, 2025

தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (மார்ச்-15) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

23,000 சம்பளத்தில் வேலை – உடனே அப்ளை பண்ணுங்க

image

தென்காசி தேசிய நலவாழ்வு குடும்பம் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு உளவியலாளர் (Psychologist) பணிக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குழந்தை பருவ உளவியலாளர் அல்லது குழந்தை உளவியல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ஊதியம் 23,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் செய்யவும். *ஷேர் பண்ணுங்க*

News March 15, 2025

தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டம் கடனா அணையில் இன்று (மார்ச் 15) 62.60 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 16 கன அடி நீர் வருகிறது. 29 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 52 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை நீர் இருப்பு 72 அடியாக உள்ளது இந்த அணையில் இருந்து 25 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை நீர் இருப்பு 28 அடியாக உள்ளது. அடவி நயினார் அணை நீர் இருப்பு 38.50 அடியாக உள்ளது.

News March 15, 2025

தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் இன்று செயல்படும்!

image

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நிகழ்ச்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று(15.3.25) அனைத்து பள்ளி கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் நிறுவனங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்களை செயல்பட்டு வருகின்றன.

News March 15, 2025

பொதுமக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நாட்கள் துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் A  திரவம் வழங்கப்பட உள்ளது. முகாமானது மார்ச் 17முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துச் சென்று பயன்பெறுமாறு  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!