India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்காசி மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார் அளிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்; இதனை அமைத்து வருகிற 25-ம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் சக்தி நகர் தென்காசி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு” கேட்டுக் கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(ஜன.12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் முதலமைச்சரின் ‘நீர்நிலை பாதுகாவலர்’ விருதுக்கு https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வருகிற 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் புதிய எஸ்.பி அரவிந்த் பொறுப்பேற்ற நாள் முதல் குற்ற சரித்திர பதிவேடு ரௌடிகள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே கருத்தானுத்து பகுதியில் ரவுடி லெனினை குற்றப் பதிவேடு செய்வதற்காக போலீசார் இன்று(ஜன.12) சென்றபோது, அவர் போலீசாரை அரிவாளால் வெட்டி தப்பியுள்ளார். * போலீசுக்கே இப்படினா? மக்களின் பாதுகாப்பு எப்படி?
தென்காசி மாவட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. ‘நாளை (ஜன.13 )திங்கட்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் மதியம் 2 மணி தேர்வினை காலை 9.45 மணி முதல் 1 மணி வரை நடத்திட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும்’ என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தெரிவித்தார்.*தேர்வு எழுதுபவர்களுக்கு பகிரவும்*
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(ஜன.12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் முதலமைச்சரின் ‘நீர்நிலை பாதுகாவலர்’ விருதுக்கு https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வருகிற 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று(ஜன.11) வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் தனியார் நிறுவனங்கள் அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார் அளிக்க புகார் குழு அமைக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் இன்று சனிக்கிழமை 11ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, தென்காசி மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அரசு மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகிரியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் முருகேசன்(32). வைகுண்ட ஏகாதசி பந்தல் அலங்கார வேலைக்கு பயன்படும் கூந்தப்பனையை வெட்டுவதற்காக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள புல்முட்டை பகுதிக்கு அவரும் அவரது நண்பர்கள் சிலரும் வியாழக்கிழமை சென்றனர். அப்பொழுது மலையில் இருந்து தவறி விழுந்ததில் முருகேசன் இறந்துவிட்டார். நேற்று சிவகிரி போலீஸார் & வனத்துறையினர் அங்கு சென்று முருகேசனின் உடலை மீட்டனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நேற்று தென் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து பகுதிகளிலும் வழங்கும் நேற்று தொடங்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கூறுகையில் 4 லட்சத்தி 74 ஆயிரத்து 710 அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 178 குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.