India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மானூர் தாலுகா தெற்கு அச்சம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சார்ந்த சண்முகையாமகன் செந்தூர்பாண்டியன் என்பவர் இன்று கேரளா மாநிலத்திலிருந்து ரூ.15,000 மதிப்புள்ள தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 360 லாட்டரி சீட்டுகளை ரயிலில் வாங்கி வந்து தென்காசி ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது தென்காசி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அவரை கைது செய்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
புளியங்குடி இன்ஸ்பெக்டர் சாம் சுந்தர் உத்தரவின் பேரில் எஸ்ஐ மாடசாமி காளிராஜ்,வினோத், திருப்பதி ஆகிய காவலர்கள் நெல்கட்டும் செவல் பகுதியில் இன்று (ஜன.15) ரோந்து சென்றபோது அப்பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள 273 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு மேல பாஞ்சாலங்குறிச்சியில் தேவர் சமுதாய இளைஞர் அணி சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் இன்று(ஜன.14) நடைபெற்றது இப்போ போட்டியை தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் பாட்டாகுறிச்சி திமுக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் கருத்தானுாரை சேர்ந்த பிரபல ரவுடி லெனின். போலீஸ் ஆவண பட்டியலில் உள்ள ரவுடி என்பதால் வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வருகிறாரா என விசாரிக்க பனவடலிசத்திரம் போலீஸ்காரர் மாரிராஜா(38), சென்றார். அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் லெனின், போலீஸ்காரரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். இதில் காயமடைந்த மாரிராஜா, சங்கரன்கோவில் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜன.14) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் http;//tenkasi.nic.in என்ற இணையதளத்தில் வரும் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; இந்திய விமானப் படைக்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர் வாயு வீரரை தேர்வு செய்யும் பொருட்டு கணினி வகை தேர்வு வருகிற மார்ச் 22 முதல் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் வருகிற 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார். இதை பகிரவும்.
தென்காசி மாவட்ட மைய நூலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8 ஆம் மாணவர்களுக்கு திறனாய்வு மாதிரி தேர்வு (NMMS) இன்று நடைபெற்றது. மேலும் 19.01.2025, 02.02.2025, 09.02.2025, 16.02.2025 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30 to 12.30 வரை மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய 9487053753, 9442185928 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
POPSK திட்டத்தில் தென்காசி மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் விரைந்து அமைக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் M.C. மருது பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(ஜன.12) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் முதலமைச்சரின் ‘நீர்நிலை பாதுகாவலர்’ விருதுக்கு https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் வருகிற 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு இன்று கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.