India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாவூர்சத்திரம் அருகே அய்யனார் கிராமத்தை சேர்ந்த சேர்மக்கனி என்பவருக்கு ஜோதி சந்திரகனி(23) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஜோதி சந்திரகனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வந்த நிலையில், நேற்று(ஜன.16) தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விசாரணையை தொடங்கியுள்ளார்.
தென்காசி எஸ்பி வெளியிட்ட செய்தியில், 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் பைக் அல்லது 4 சக்கர வாகனம் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பெற்றோர்கள் அலட்சியம் காட்டக்கூடாது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. இவ்விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும் என அறிவுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட காவல்துறை சமூக ஊடகத்தின் வாயிலாக சாலையில் பயணிக்கும் போது வளைவுகளில் மெதுவாக செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை பதிவை வித்தியாசமான முறையில் விழிப்புணர்வாக பதிவு செய்துள்ளது. அறிவியல் பதிவின்படி மையவிலக்கு விசை பற்றிய விழிப்புணர்வு குறிப்பு இடம் பிடித்துள்ளது.
திருவள்ளுவர் தினத்தில் தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 12 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து, பிசான சாகுபடிக்காக இன்று(16/1/25) முதல் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ஏகே.கமல் கிஷோர் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் 9,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைகிறது.
பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை, கோவை, திருப்பூர் செல்ல வசதியாக சுரண்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஜன.18,19 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னைக்கு மாலை 5:00 மணி & மாலை 5:30, கோவைக்கு இரவு 7.30, 8.15 மணி திருப்பூருக்கு இரவு 7.00, & 8.00 மணி. மேலும் விவரங்களுக்கு சுரண்டை பேருந்து நிலைய தொடர்பு எண்கள் 6383939571, 9629211549
தென்காசி டிஎஸ்பி தமிழினியன் தலைமையில் அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க மறைந்த காவலர் சையத் அலியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரடியாக வீட்டுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் ஏடிஎஸ்பி வேணுகோபால், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய நகர செயலாளராக M.V.கண்ணனை அக்கட்சியின் தலைவர் வைகோ நேற்று(ஜனவரி 15) அறிவித்தார். தொடர்ந்து, புதிய நகர செயலாளருடன் கட்சியின் நிர்வாகிகள் இணைந்து பயணிக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு தலைவர் வைகோ அறிவுறுத்தினார்.
தென்காசி மாவட்டத்தில் 15ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தென்காசி, சங்கரன்கோவில் ஆலங்குளம் புளியங்குடி ஆகிய நான்கு உட்கோட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு ரோந்து பணியில் நான்கு காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ஈடுபடுவார்கள்.அவசர உதவிகளுக்கு இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.