Tenkasi

News January 18, 2025

ஏபி நாடானூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக கடையம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அணைந்த பெருமாள் நாடானூர் ஊராட்சியில் வரும் 20ஆம் தேதி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொள்ள உள்ளார். இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கட்சி சார்பில் இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 18, 2025

இருக்கன்குடி கோயிலுக்கு சென்ற தென்காசி பக்தர் உயிரிழப்பு!

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலி பட்டியை சேர்ந்தவர் மாரிச்செல்வம்(31), திருமணமாகவில்லை. இவர் தனது குடும்பத்துடன் நேற்று(ஜன.17) சாத்தூர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வழிபட சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

News January 18, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (ஜன.17) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

News January 17, 2025

விமான பயணம் மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்கள்

image

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேர் சென்னைக்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர். இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் ஏற்பாட்டில் முதன்முறையாக மதுரையில் இருந்து விமானம் மூலம் நாளை (ஜன.18) சென்னைக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 17, 2025

தென்காசி அரசு மருத்துவமனைக்கு விருது

image

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயலாற்றிய முதல் 5 மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது. அதனை முன்னிட்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விருதினை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்ட அலுவலர் ராஜேஷ் ஆகியோரிடம் வழங்கினார். இன்று அவர்களை மாவட்ட கலெக்டர் மற்றும் இணை இயக்குநர் பாராட்டினர்.

News January 17, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி கல்வித்துறையும் கலால் துறையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அறிவித்திருந்த ‘தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுக்கு எதிரான மாபெரும் ரீல்ஸ் /ஷார்ட்ஸ் விழிப்புணர்வு போட்டி’க்கு படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 17. 1.2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பங்கேற்பாளர்களின் கோரிக்கையை ஏற்று படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 20.01.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2025

வனப்பகுதியில் சிக்கிய 2 பேர்! போன் லொகேசன் மூலம் மீட்பு

image

தென்காசியை சேர்ந்த ஆஷிக், ஷெரிப் ஆகியோர் தமிழக – கேரள எல்லையான புளியரை அடுத்த ஆரியங்காவு பாலருவி வனப்பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆர்வமிகுதியில், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தென்மலை வனத்துறையினர் மற்றும் போலீசார் போன் லொகோசனை வைத்து நள்ளிரவு 12 மணி அளவில் இருவரையும் மீட்டுள்ளனர்.

News January 17, 2025

தென்காசி மாவட்டத்திற்கு 252 மெட்ரிக் டன் உரம் வருகை

image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பிசானப்பருவ நெல் சாகுபடி விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பயிர்களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, நேற்று(ஜன.16) நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு 252 மெட்ரிக் டன் யூரியா உரம் பிரித்து அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

News January 17, 2025

புதுப்பெண் தற்கொலை – ஆர்டிஓ விசாரணை!

image

பாவூர்சத்திரம் அருகே அய்யனார் கிராமத்தை சேர்ந்த சேர்மக்கனி என்பவருக்கு ஜோதி சந்திரகனி(23) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஜோதி சந்திரகனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வந்த நிலையில், நேற்று(ஜன.16) தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா விசாரணையை தொடங்கியுள்ளார்.

News January 17, 2025

தென்காசி எஸ்பி கடும் எச்சரிக்கை: பெற்றோர்களே உஷார்!

image

தென்காசி எஸ்பி வெளியிட்ட செய்தியில், 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் பைக் அல்லது 4 சக்கர வாகனம் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பெற்றோர்கள் அலட்சியம் காட்டக்கூடாது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. இவ்விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும் என அறிவுத்தியுள்ளார்.

error: Content is protected !!