India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட புதிய பாஜக தலைவர் ஆனந்தன் நேற்று(ஜன.19) கூறியதாவது, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற அனைத்து பூர்வாங்க பணிகளும் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும். அதிகமான அளவில் சூறையாடப்படும் கனிமவள கொள்ளை தொடர்பான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மாநில தலைமை ஆலோசனையின்படி நடத்தப்படும் என்றார்.
தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு பாஜகவில் புதிய மாவட்ட தலைவர்கள் இன்று (ஜன.19) நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அதன்படி தென்காசி மாவட்டத்தின் பாஜக புதிய மாவட்டத் தலைவராக ஆனந்தன் அய்யாசாமி நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேர் நேற்று முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் உதவியுடன் மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றனர்.
சங்கரன்கோவிலில் இன்று(ஜன.19) நடைபெறும் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சங்கரன்கோவில் வருகை தந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, இன்று காலை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ஈஸ்வரன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்றிரவு(ஜன.18) முதல் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனி மற்றும் கனமழையால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குளுமையான காநிலை நீடித்து வருகிறது.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோயிலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் பாண்டியன், அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் சுசீகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது விழாக்குழுவினர் ராஜேந்திர பாலாஜிக்கு வீரவாளை பரிசாக வழங்கினர்.
தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருவதால், இன்று(19/1/25) லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT.
தென்காசி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்காசி மாவட்டத்தில் 18ஆம் தேதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய நான்கு உட்கோட்டங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள நம்பரில் தொடர்புகொள்ளவும் மாவட்ட காவல்துறை வேண்டுகோள்.
ஜனவரி 18 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட பாஜக “தலைவருக்கான” தேர்தல்நடை நடைமுறைகள் கோவிலில் தற்போது காலை 10:30 மணியளவில் துவங்கியுள்ளது. பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது.சிறப்பான முறையில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. பாஜக உறுப்பினர் ஆனந்தன் அய்யாசாமி கலந்து கொண்டுள்ளார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேர் சென்னைக்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர். இவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் ஏற்பாட்டில் முதன்முறையாக மதுரையில் இருந்து விமானம் மூலம் இன்று(ஜன.18) சென்னை செல்கின்றனர். இதற்காக இன்று அதிகாலை பாவூர்சத்திரத்தில் இருந்து ரயில் மூலம் அவர்கள் மதுரை கிளம்பி சென்றனர்.
Sorry, no posts matched your criteria.