India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 17 வயதான பிளஸ் டூ பள்ளி மாணவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அவருக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்து பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ‘யார் அந்த சார்’ வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை, தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன்யன் தலைமையில் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அஇஅதிமுகவினர் ஒட்டினர். இதில், திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று(ஜன.24) வருகை தந்த சபாநாயகர் மற்றும் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அப்பாவு எம்.எல்.ஏவை தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். தென்காசியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் வருகை தந்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் நேற்று(ஜன.23) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நெகிழி தடுப்பு முயற்சியாக தென்காசி யானை பாலத்தில் ஜன.25ஆம் தேதி காலை மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்புடன் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி, விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் தென்காசி மார்க்கெட் பகுதியில் நடைபெறும். அதனை தொடர்ந்து வார்டு 23-ல் உள்ள வீடுகளில் நெகிழி சேகரிப்பு நடைபெறவுள்ளது.
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஆனந்தன் அய்யாசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ZOHO நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவை கடையம் அருகே கோவிந்தபேரியில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று(ஜன.23) சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொடர்புடைய போலீசார் ஒருவரை கைது செய்து மற்றொரு போலீசாரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மோகன்(50) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் புளியங்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக உள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“இன்று (24.01.2025)
காலை 10.00 மணி அளவில்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தென்காசி இ.சி.ஈ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் பேரணி நடக்கிறது; பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி ஞாயிறு காலை 8.10 மணிக்கு தென்காசி மாவட்டம், இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்ஏ.கே. கமல் கிஷோர், தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்” என தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குடியரசு தினமான 26.1.2025 அன்று காலை 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டத்தில் கூட்ட பொருளாக கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். *SHARE IT*
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்காசி மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பை அங்கீகரித்து விருது வழங்கப்பட உள்ளது. விருதினை <
Sorry, no posts matched your criteria.