India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஜன.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையாகும். மருத்துவமனை முழுவதும் சுகாதாரமான முறையில் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் பொதுமக்கள் ஒத்துழைப்போடு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தலைமை மருத்துவருக்கு மாநில அளவில் சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக அளவில் மாநிலத்தில் சிறந்த மருத்துவருக்கான விருது சென்னையில் மருத்துவ பணிகள் இயக்குனர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செங்கோட்டை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருது பெற்ற பின் ராஜேஷ் கண்ணன் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உற்சாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேங்கை வயல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தலின்பேரில் தென்காசி தெற்கு மாவட்ட விசிகவினர் ஜனவரி 31ஆம் தேதி மாலை 3 மணிக்கு தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ளும் படி மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் அலுவலகம் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தியதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 8 பேரை லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (ஜன.26) தென்காசி மாவட்டத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி, கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஆகவே, உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் கொடியேற்ற நிகழ்வுகளை செய்திகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து மதுபான கூடங்கள் மதுபான கடைகள் மூடப்படுகிறது .இதனை மீறி கள்ள சந்தையில் மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நெல்லை – தென்காசி தேசிய நெடுஞ்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தின் மாநில தலைவர் விக்ரம ராஜா நேற்று வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி ஃபார்ம், டி ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் www.muthalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஜன.24) தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.