Tenkasi

News January 30, 2025

தென்காசி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் வரும் பிப்.,1 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், தென்காசி, கடையம், சுரண்டை, சாம்பவர் வடகரை, புளியங்குடி, செங்கோட்டை, கீழப்பாவூர், ஊத்துமலை, சங்கரன்கோவில் டவுண், ஆலங்குளம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்*

News January 30, 2025

தென்காசிக்கு பிப்ரவரி 3-ல் நடிகர் சரத்குமார் வருகை

image

தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகர் சரத்குமார் பிப்.3 ந் தேதி தென்காசிக்கு வருகிறார். இங்கு நடைபெறும் பகுதிஷ, மாவட்ட தலைவர்களிடமும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சரத்குமார் தென்காசி வருகை தரவுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.*அவரது ரசிகர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

News January 30, 2025

தென்காசி மாவட்ட அணிகளின் நீர் இருப்பு நிலவரம்

image

தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே 132 அடி முழு கொள்ளளவு உள்ள அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 73.25, 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 55.45 அடி, 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமன் நதி அணை நீர்மட்டம் 63 அடி, 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 60.60 அடியாக உள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 30, 2025

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 744-ல் 71.6 கி.மீ முதல் 139.9 கி.மீ வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகள் விவசாய பணிகள் செய்ய வேண்டாம் என்று நெடுஞ்சாலைத்துறை செய்து குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் சிவகிரி வட்டத்தில் தொடங்கி ராயகிரி ,கடையநல்லூர் காசி தர்மம், செங்கோட்டை வரை கையகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2025

தென்காசி இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்

image

இன்று 29.01.2025 தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2025

விரைவில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள்

image

தென்காசி நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்குகின்றன. தென்காசி ஆசாத்நகர் பகுதியில் இருந்து குத்துக்கல்வலசை பகுதியை இணைக்கும் புதிய சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் புதிய ரிங் ரோடு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மேற்கொண்டு வருகிறார்.

News January 29, 2025

16 கோடி வரிப்பாக்கி நோட்டீஸ் – மக்கள் அதிர்ச்சி   

image

சில்லரைப்புரவில் பண்பொழி திருமலை கோவில் நிலத்தில் குடியிருந்து வரும் பொதுமக்கள் ரூ.16 கோடி வரிப்பாக்கியை கட்டக்கோரி கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த குறுக்கிட்டானூர், முத்துமாலைபுரம், வேலப்பனூர், காக்கையனூர் உள்ளிட்ட கிராம மக்கள் சில்லரைப்புரவு ஊராட்சி தலைவர் குமார் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News January 29, 2025

தை அமாவாசைய – குற்றால அருவியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

image

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள திருக்குற்றால நாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு குற்றால அருவியில் தீர்த்த வாரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று(ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு குற்றாலநாதர் சுவாமி குற்றால அருவியில் புனித நீராடி தீர்த்தவாரி நடைபெற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News January 29, 2025

புளியரை: பெண் குளிப்பதை படமெடுத்த பாஜக நிர்வாகி கைது

image

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், புளியரை போலீசார் வழக்குப் பதிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய முன்னாள் பட்டியல் அணியினுடைய மாவட்ட தலைவர் குமார் என்பவரை நேற்று(ஜனவரி 29) கைது செய்துள்ளனர்.

News January 29, 2025

தென்காசி: ஊய்க்காடு சுடலைமாட சுவாமி கொடை விழா

image

தென்காசி ஆசாத்நகர் ஊய்க்காடு சுடலைமாடசாமி கோயில் கொடை விழா இன்று(ஜன.29) தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வாக ஜனவரி 31ஆம் தேதி தீர்த்தவாரி, பொங்கல் வைத்தல், தீபாராதனை, அர்த்த சாமபூஜை, இன்னிசை கச்சேரி, கரகாட்டம், வான வேடிக்கை உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!