India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்கள் ஆதார் கார்டு, மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு இரசீது, வீட்டுத் தீர்வை இரசீது. சமையல் எரிவாயு அடையாள அட்டை/வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் (30-04-2025)-தேதிக்குள் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இலத்தூர் ஹைலேண்ட் சிட்டி பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான மத்திய அரசின் சான்றிதலுடன் கூடிய ஆரி ஒர்க், எம்ராய்டிங் மற்றும் பூந்தையல் தைப்பதற்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7502596668 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். உடனே ஷேர் செய்யவும்
நீர்த்தேக்கங்களை குத்தகைக்கு எடுக்க விருப்பமுள்ளவர்கள். இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியானது வரும் 22042025-ம் தேதி பிற்பகல் 200 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் adfishtirunelveliz@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவோ (அ) மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் பொதுப்பணித்துறை வளாகம், தென்காசி (இ) குற்றாலம் என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் இதுவரை சுமார் 50600 விவசாயிகள் மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். பல விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். தகுதியான விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இந்த பதிவு அவசியமாகும். எனவே, 30.04.2025-க்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் உரிய விபரங்களை கொடுத்து பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தென்காசி, கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 53.25 அடி. 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 51.20 அடி, 72 அடி முழு கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணையின் நீர்மட்டம் 25.92 அடி. 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டார் அணையின் நீர்மட்டம் 25 அடி, 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 30.25 அடி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
▶️திருவேங்கடம் வட்டாட்சியர் 04636-264400
▶️சங்கரன்கோவில் வட்டாட்சியர் 04636-222270
▶️சிவகிரி வட்டாட்சியர் 04636-250223
▶️ஆலங்குளம் வட்டாட்சியர் 04633-270899
▶️வீரகேரளம்புதூா் வட்டாட்சியர் 04633-277140
▶️ கடையநல்லூா் வட்டாட்சியர் 04633-245666
▶️ செங்கோட்டை வட்டாட்சியர் 04633-233276
▶️ தென்காசி வட்டாட்சியர் 04633-222262
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி முனியாண்டி – பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந்து தென்காசி மாவட்டம் ராயகிரியில் கரும்பு அரைவை ஆலை நடத்தி வருகின்றனா். இத்தம்பதி டிராக்டரில் கரும்பு ஏற்றுவதற்காக சென்றனர். அப்போது வேகத்தடையில் டிராக்டா் ஏறி இறங்கியபோது, பெரியநாயகி தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஏப்.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்களை அவசர உதவிக்கு அழைக்கலாம் என்றும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்களும் பதிவிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆப்டிகல் டிக்னீசியன் காலிப்பணிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கடைசி தேதி மே.31. ஊதியம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு Share செய்து உதவிடுங்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. தென்காசி மாவட்டத்தை உள்ளடக்கிய நெல்லை பணிமனையில் 139 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
Sorry, no posts matched your criteria.