Tenkasi

News February 8, 2025

சிவகிரி: மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம்?

image

சிவகிரியில் இ.கம்யூ., கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகிரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படாததால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், பிப்ரவரி இறுதிக்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News February 8, 2025

வட மாநில தொழிலாளர்களுக்குள் வாக்குவாதத்தில்  கொலை

image

கடையநல்லூர் அருகே உள்ள புன்னியாபுரம் முந்தல் பகுதியில் தனியார்க்கு சொந்தமான நெல் அரவைஆலையில் டெல்லியைச் சேர்ந்த சங்கர் சரோஜ் மகன் அணி கோட் மற்றும் நல்லா சரோஜ் மகன் உபேந்தர் 2 நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் வேலை பார்ப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உபேந்தர் கத்தியால் அணி கேட்டை குத்தியதில் சம்பவ இடத்தில் அணி கேட் பலியானார். போலீசார் விசாரணை

News February 8, 2025

மர்ம திரவம் குடித்து கல்லூரி மாணவர் பலி

image

தென்காசி அருகே உள்ள நயினாரகத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (18 )அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அவரது நண்பர்களும் சேர்ந்து மர்ம திரவம் குடித்ததாக கூறப்படுகிறது. வேல்முருகன் மூளைச்சாவு அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக நேற்று மருத்துவர்கள் தெரிவித்தனர் .இது குறித்து தென்காசி மாவட்ட போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News February 7, 2025

தென்காசி மக்களே ஒரு அரிய வாய்ப்பு

image

தென்காசி மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 9791338296 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசேஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் (<>இங்கே கிளிக் செய்து<<>>) உங்கள் தகவல்களை பகிரலாம். *செய்தி ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பகிரவும்.

News February 7, 2025

பூலித்தேவனுக்கு நினைவுச் சின்னம் அமைத்தவர் கலைஞர்: CM பேச்சு

image

பூலித்தேவனுக்கு நெல்கட்டும் செவலில் நினைவுச்சின்னம் அமைத்தவர் கலைஞர் என முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். நெல்லையில் 1973-ல் ஈரடுக்கு பாலம் அமைத்து திருவள்ளுவர் பாலம் என பெயர் சூட்டியவர் கலைஞர். எந்த ஆட்சியிலும் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. நெல்லையப்பர் கோயில் மேற்கு, தெற்கு வாசல் திமுக ஆட்சியில்தான் திறக்கப்பட்டது என்றும், நெல்லையில் இன்று பேசியுள்ளார்.

News February 7, 2025

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனம்

image

தென்காசி மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அனைத்து துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் இன்று உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, ஆட்சியர் கமல் கிஷோர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

News February 7, 2025

சாம்பவர் வடகரையில் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு?

image

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஒரே சமூகத்தை சேர்ந்த 8 குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்துள்ள அவலநிலை அரங்கேறியுள்ளது. இதனையடுத்து, இதில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக சாம்பவர் வடகரை சுற்று பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

News February 7, 2025

தோரணமலையில் வருண கலச பூஜை!

image

தென்காசி – கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை யன்றும் வருண கலச பூஜை நடைபெறும். அதன்படி தை கடைசி வெள்ளிக்கிழமையான இன்று(பிப்.7) அதிகாலை 5 மணிக்கு மேல் இப்பூஜை நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ளும்படி பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். SHARE IT.

News February 6, 2025

தென்காசி இரவு காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம்

image

தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம்.

News February 6, 2025

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த தென்காசி எஸ்பி

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி அரவிந்த் தலைமையில் நேற்று பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!