India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்டத்தின் அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அளித்தனர். அந்த வகையில் இன்று 552 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டம் உதயமாக வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தென்காசி புதிய மாவட்டமாக உருவானது. இதை தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.119 கோடி செலவில், 6 மாடிகளுடன் பிரமாணடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
தென்காசி மாவட்ட விவசாயிகள் பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். மேலும், இத்திட்டத்தில் பயனடைய விவசாயிகளின் தரவுகள் சேகரிக்க, கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணு முறையில் அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆதார் எண்ணை போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (பிப்.09) நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் 50 ஆண்டு கால விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதி செண்பகவல்லி அணை சீரமைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசுக்கு வழிகாட்டுமாறு அதில் தெரிவித்துள்ளார்.
தென்காசி வாய்க்கால்பாறை அருகில் அமைந்துள்ள இசக்கி வித்யா ஷரம் பள்ளியின் 11வது ஆண்டு விழா இன்று (பிப்.9) நடைபெற்றது. இவ்விழாவில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் பள்ளி நிர்வாகி இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி தலைமை அஞ்சலகத்தில் பார்சல் சேவை வழங்கும் சிறப்பு முகாம் பிப்ரவரி மாதம் முழுவதும் நடைபெறுகிறது. பொதுமக்கள், வியாபாரிகள் தங்களது பொருட்களை அனுப்ப பார்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும், விபரங்களுக்கு 04632 221013 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம் ,சங்கரன்கோவில் பகுதிகளில் 43 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பெற்று பிப்.10 முதல் தென்காசி, சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் பைஜூல் அன்வர் அரபிக் கல்லூரியின் 46 ஆம் ஆண்டு ஆலிம் பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பேசுகையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து முழுமையாக பேச நான் தயாராகவில்லை. எந்த நிலையிலும் எந்த மதத்தினரையும் தவறாக பேசியது கிடையாது என்றார்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (சத்துணவு பிரிவு அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்க்காணும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க தகுதிகள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் 15.02.2025 *ஷேர்
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள் ஆகியவை பிப்ரவரி 11ஆம் தேதி மூடப்படுகின்றன. கள்ளச் சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.