India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் <
பிப்ரவரி 13, தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவியில் அவசர கால வெள்ள மீட்புபணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் பேரிடர் மீட்பு குழு பேரிடர் நேரத்தில் எவ்வாறு மீட்பு பணி மேற்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (பிப்-13) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி, தென்காசி மாவட்டம் கடனா அணை நீர் இருப்பு 53.50 அடியாக உள்ளது. நீர்வரத்து 17 கன அடியாக குறைந்துள்ளது. 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர் இருப்பு 52 அடியாக உள்ளது. அணைக்கு 25 கன அடி நீர் வருகிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 49 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3 கன அடியாக குறைந்துள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 33 அடியாக உள்ளது.
திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளராக தென்காசி முன்னாள் எம்.பி. தனுஷ்குமார் இன்று(பிப்.13) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பினை திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதியின்பேரில், பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தனுஷ்குமாருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியை சேர்ந்த பொன்மாறன்(4) என்ற 4 சிறுவன் கழுத்து பகுதியில் கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சைக்காக நேற்று(பிப்.12) நெல்லை GH-ல் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். மருத்துவர்கள் தவறான ஊசியை செலுத்தியதாலேயே சிறுவன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர் அகதிகள் முகாம் அருகே காட்டுப் பகுதியில் நேற்று இரவு எரிந்த நிலையில் ஆண் சடலம் தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் தென்காசி, இலத்தூர் பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண் சடலம் கிடைத்துள்ள செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவுடையானூரை சேர்ந்த ராம் குமார் என்பவர் தென்காசியில் சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து அதிகாரிகளை கண்டித்து செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், தற்கொலை முயற்சி செய்தல் ஆகிய பிரிவின் கீழ் தென்காசி போலீசார் நேற்று(பிப்.11) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், 9 முதல் 15 வயதுடைய இளம் தலைமுறை உங்களை கடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள், உங்களை ஏன் எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை கருப்பொருளாக வைத்து கடிதம் எழுதி சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக அஞ்சல் துறை தலைவர் சென்னை, நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வரும் 18-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றார்.
மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு சென்று வெற்றி பெற்று தென்காசி ரயில்வே நிலையத்திற்கு வருகை தந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் மாணவர்கள் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.