Tenkasi

News February 20, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர. இன்று (19.2.25)புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி போன்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான உதவிகள் மட்டும் குறைகளை தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

News February 19, 2025

குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

image

சாம்பவர் வடகரையில் ஊர் கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி 8 குடும்பங்களை அந்த கிராமத்தைச் சேர்ந்த நாட்டாமை நீக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நியாயம் கேட்டும் நாட்டாமை மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் உரிய அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

News February 19, 2025

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

image

தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே உள்ள 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 59.25 அடி. கடையநல்லூர் அருகே உள்ள 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 45.93 அடி. கடையம் அருகே உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 48.50 அடி. கடனா அணை நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளதாக இன்று(பிப்.19) மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 19, 2025

தென்காசியில் இருந்து காசிக்கு சென்ற 3 பேர் மாயம்?

image

தென்காசியில் இருந்து 40 பேர் கொண்ட ஒரு குழு காசிக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளது. காசியிலிருந்து அயோத்திக்கு செல்லும்போது தென்காசி பகுதியை சேர்ந்த கஸ்தூரி, ஆதிலட்சுமி, அவரது கணவர் கண்ணன் ஆகியோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து வருகிறார்.

News February 19, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்று (18.2.25)தென்காசி ஆலங்குளம் சங்கரன்கோவில் புளியங்குடி போன்றிருக்கிறது அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் குறைகளை மேற்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

News February 18, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு 

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (பிப்-18ம்) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 18, 2025

இலத்தூரில் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்தின் இயக்குனர் ஆய்வு

image

தென்காசி அடுத்த இலத்தூரில் சில நாட்களுக்கு முன்பு சிவகாசியைச் சேர்ந்த ஜான் என்பவர் அவரது மனைவி கமலியை கொலை செய்து தீ வைத்து எரித்து சென்று விட்டார். தற்போது அவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் சம்பவம் நடந்த  இடத்தை ஆய்வு செய்தார்.

News February 18, 2025

சிவகிரி: ஐகோர்ட் உத்தரவு – ஆவணங்களை வழங்கிய வங்கி

image

சிவகிரியில் மாரிதுரை என்பவர் கடன் தொகை முழுவதும் செலுத்திய பிறகும், ஆவணங்களை தர மறுத்து கூடுதல் பணம் செலுத்தக் கூறியதாக தொடர்ந்த வழக்கில் தனியார் வங்கி மேலாளருக்கு உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்தது. மேலும் வாடிக்கையாளரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆவணங்களையும் அபராதத் தொகையையும் வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து வங்கி பணியாளர்கள் அவரது வீட்டிற்கு நேற்று(பிப்.17) நேரில் சென்று அவற்றை வழங்கினர்.

News February 18, 2025

மோடி அரசே தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? – வைரல் போஸ்டர்

image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மோடி அரசே, தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? திட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து, இந்தியை திணிக்க நிதியை மறுத்து மிரட்டி பார்க்கிறது மோடி அரசு என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த போஸ்டரால் அப்பகுதியில் பேசு பொருளாகி உள்ளது. இது குறித்து உங்கள் கருத்து?

News February 18, 2025

‘மஞ்சப்பை’ விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மே 1-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் https://tenkasi.nic.in மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்தில் WWW.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!