India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது அவரை வரவேற்று அதிமுக சார்பாக நான்கு வழிச்சாலையில் கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் அமைக்கபட்டன. வேட்டைக்காரன்குளம் சாலையில் அமைக்கபட்ட அதிமுக கொடிகம்பங்களை போலீசார் அகற்றி அவமதித்தாக கூறி அதிமுகவினர் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தென்காசி, கடையநல்லூர் மக்கா நகர் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்தனர். 3வரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை தெருநாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடையநல்லூர் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று கருவந்தா சி.எஸ்.ஐ மண்டபத்திலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சிக்கான முகாம் நடுவக்குறி .பி.ஆர்.சி கட்டிடத்திலும், நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கமல கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் பெய்த கனமழையால் தென்காசியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணபடுகிறது. மேலும் நமது தென்காசி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 நாட்களில் இயல்பை விட 107 மி.மீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று கருவந்தா சி.எஸ்.ஐ மண்டபத்திலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சிக்கான முகாம் நடுவக்குறி .பி.ஆர்.சி கட்டிடத்திலும், நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கமல கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்னாசி இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <
தென்காசி அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம் தான் இந்த “பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்” (PM-SYM). இதில் சந்தாதாரர் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000-யை குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், ஓட்டுநர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்கள் <
தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா வரும் ஆகஸ்ட்.7ம் தேதி வியாழன் அன்று நடைபெற இருப்பதால், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி, மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக (23.08.2025) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஆக.4) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
தென்காசி மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.