Tenkasi

News February 24, 2025

அய்யா அவதார தினம்: தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை!

image

அய்யா வைகுண்டரின் 193ஆவது அவதார திருவிழா மார்ச் 4 அன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அன்றைய தினம் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15 வேலை நாளாகும் என தென்காசி கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE IT.

News February 24, 2025

தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 04.03.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு 04.03.2025 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

News February 24, 2025

அய்யா அவதார தினம்: தென்காசிக்கு லீவ் விட கோரிக்கை!

image

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினம் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என சத்திரிய சான்றோர் படை கட்சி நிறுவன தலைவர் ஹரி நாடார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அக்கட்சியின் தென்காசி மாவட்ட பொறுப்பாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி, நெல்லைக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

News February 24, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு 

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (பிப்.23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2025

செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் 

image

செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி, பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க தென்காசி எஸ்பி அரவிந்த் சிபாரிசுபடி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டார். ஆய்வாளர் பாலமுருகன் ரவுடியை சிறையில் அடைத்தார்

News February 23, 2025

காசி விஸ்வநாத கோவில் கும்பாபிஷேகம் தள்ளி வைக்கப்படுமா!

image

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் 1990, 2006 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது பல கோடி செலவில் ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல்.7ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பிப்.21 இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் பழனி கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பணிகள் நிறைவு பெற சில மாதங்கள் ஆகலாம் என்பதால் கும்பாபிஷேக தேதி தள்ளிப்போகலாம் என தெரிகிறது.

News February 23, 2025

கையாடல் செய்த இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

image

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளர் ராஜா முகமது. 2023 மார்ச் முதல் 2024 மார்ச் 31 வரை உள்ளாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தணிக்கையில் டெண்டர் வைப்புத்தொகையில் இவர் ரூ.21 லட்சத்து 48 ஆயிரத்து 890 கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். ராஜா முகமது இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 23, 2025

புளியங்குடியில் காட்டுப்பன்றி தாக்கி ஒருவர் பலி 

image

புளியங்குடியில் விவசாயி வாவாகான் (56) வீரப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கிணற்றில் தண்ணீர் பாய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். செல்லும் வழியில் காட்டுப்பன்றி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதை அறிந்த புளியங்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் இரவு நேர ரோந்து பணிக்கான அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்று (பிப்-22) புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி  பகுதிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் குறைகளை மேற்கண்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

News February 22, 2025

யாருக்குமே தெரியாத இந்த இடத்திற்கு போயிருக்கீங்களா?

image

தென்காசியில் 9 அருவிகளில் ஒன்று புலி அருவி. குகைக்குள் சென்று குளிக்கும் அனுபவத்தை கொடுக்கக்கூடியது. 7அடி உயரத்தில் 3 செயற்கையாக அமைத்த பிரிவுகள் வழியாக தண்ணீர் வழிந்தோடும். அடர்ந்த மரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த அருவியில் குளித்து குதூகலிக்க பலருக்கு எப்போதும் ஆசை தான். மித வேகத்தில் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாதவாறு தண்ணீர் கொட்டும். இங்கு யாரெல்லாம் குளிச்சி இருக்கீங்க. SHARE

error: Content is protected !!