India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தென்காசியில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் நம் தென்காசி மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணம் சாதாரண தியேட்டர் ரூ. 130 – 160 மற்றும் மல்டிப்பிளக்ஸ் ரூ.190 ஐ விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் தென்காசி தாசில்தார் (04633-222262) அல்லது இங்கு <
தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கரடி உலா வந்து கொண்டு இருக்கிறது. வனத்துறையினரும் கரடியை பிடிக்க கரடி உலா வந்த பகுதிகளில் முகாமிட்டு கூண்டுகள் அமைத்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உங்கள் பகுதியில் கரடிகள் உலா வந்தால் வனத்துறையின் 24 மணி நேரமும் செயல்படும் 1800 425 4409 (அ) 044 24323783 புகாரளியுங்க. SHARe பண்ணுங்க!
தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் 2025ஆம் ஆண்டு தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.in.gov.in-இல் தெரிந்து கொள்ளலாம். அலுவலக வளாகத்தில் செயல்படும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 28.08.2025க்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0462-2502521
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (11.08.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் உத்தரவின் பேரில் இன்று (11.08.2025) தென்காசி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பாக தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில் , வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
சிவகிரி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்த துளசி(26), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். உடல்நிலை காரணமாக ஊருக்கு வந்தவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். சிவகிரி இன்ஸ்பெக்டர் முரளீதரன், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் (11.08.2025) மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். மேலும், கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், என மொத்தம் 432 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <
தென்காசி மாவட்டத்தின் புதிய சார் ஆட்சியராக வைஷ்ணவி பால் இன்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். 19 வருடங்களுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும், விவசாயம் குறித்த பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்காசி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.