India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 44 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இங்கு<
தென்காசி அரசு பள்ளி மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இடைகால் பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதிக்கு அரசு சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இதில் எஸ்.பி அரவிந்த், டிஆர்ஓ ஜெயச்சந்திரன் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
சங்கரன்கோவில் ex.MLA, முத்து செல்வியின் இன்றைய எக்ஸ் தளப்பதிவு; தொடர்ந்து புறக்கணிக்கும் தென்காசி வடக்கு மாவட்ட கழகத்திற்கு நன்றி; கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கும் எனக்கு அழைப்பு விடுக்காத மாவட்ட கழக நிர்வாகத்திற்கு நன்றி. நீங்கள் என்னை தொடர்ந்து புறக்கணித்தாலும் தலைவர் தளபதியார் வழியில் பயணிப்பேன் பணி செய்வேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை ஓரத்தில் நின்று சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. தற்பொழுது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தென்காசி மாவட்ட மக்கள் 04633-299544 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
தென்காசி இளைஞர்களே வேலை வாய்ப்புகளை தேடி ஓவ்வொரு இணையதளங்களில் செலுவிடும் நேரம் மற்றும் செய்திதாள் வாங்கும் செலவும் இனி மிச்சம். தமிழக அரசு அறிமுகபடுத்தி இருக்கிற ‛நான் முதல்வன்’ செயலில வேலை வாய்ப்புகளை தெரிஞ்சுக்கலாம். இனி நீங்க எங்கேயும் அழைய வேண்டிய அவசியமில்லை… இங்கே <
தென்காசி மக்களே! இன்று 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தினத்தை போற்றும் விதமாக வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல், புது வாக்காளராக சேரும் பணிகளை செய்வோமா? பழைய வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்க இங்கு <
சங்கரன்கோவில் நகராட்சியில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வருகிற ஆக.18ம் தேதியன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. திமுகவை சேர்ந்த உமாமகேஸ்வரி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, 28 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் அவர் பதவியை இழந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்போது காலியாகவுள்ள பதவிக்கு (பெண்) மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது. *மறக்காம ஷேர் பண்ணுங்க
தென்மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17-ம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 18-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு பெங்களூரு சிவமொக்கா சென்றடைகிறது. மறுமார்க்கமாக 18-ம் தேதி மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு 19-ம் தேதி காலை 10:15 மணிக்கு நெல்லை வருகிறது.
Sorry, no posts matched your criteria.