Tenkasi

News August 18, 2025

தென்காசி: இந்திய விமான படைக்கு ஆள் சேர்ப்பு – ஆட்சியர்

image

தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆர்வலர்கள் இந்திய விமானப்படையில் 2026ம் ஆண்டிற்கான https://agnipathvayu.cdac.in என்ற அக்னிவீர்வாயு இணையதளத்தின் ஆள்சேர்ப்பிற்கு வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்க்கை தேர்வு 02.09.2025 முதல் ஆண்களுக்கும் 05.09.2025 முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல்.

News August 18, 2025

BREAKING: சங்கரன்கோவில் நகராட்சிக்கு புதிய தலைவர்

image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 11:15 மணிக்கு துவங்கியது. சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கவுசல்யா 22 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் அண்ணாமலை புஷ்பம் 6 ஓட்டுகள் பெற்றார்.

News August 18, 2025

பாவூர்சத்திரம்: அழகு முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை

image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் அருணாப்பேரியில் அமைந்துள்ள அழகு முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடிமாதம் முழுவதும் தினசரி காலை மாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆவணி மாத பிறப்பை யொட்டி இன்று அதிகாலையில் உலக அமைதி வேண்டி கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News August 18, 2025

தென்காசி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 8 ஆகும். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தென்காசி: சொத்து வாங்கும் போது இதை CHECK பண்ணுங்க…

image

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சாரம்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 போன் செய்து CHECK பண்ணி வாங்குங்க…SHARE பண்ணுங்க..

News August 18, 2025

தென்காசியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக. 22 அன்று காலை 10 முதல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார். இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8 வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ தகுதியுடையோர் www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க…SHARE பண்ணுங்க…

News August 17, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம்.அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்

News August 17, 2025

தென்காசியில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை; மிஸ் பண்ணாதீங்க!

image

தென்காசி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Consultant, Attender, Therapeutic Assistant பணிகளுக்கு 5 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். <>APPLY<<>> இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20-08-2025 வரை. 8ம் வகுப்பு, டிகிரி மற்றும் நர்சிங் படித்த தகுதியான நபர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். பிறருக்கு உதவும் வகையில் ஷேர் செய்யுங்கள்.

News August 17, 2025

குற்றாலம் செல்வோர் கவனத்திற்கு!

image

பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் வனத்துறை அறிவித்துள்ள நேர கட்டுப்பாட்டை மீறி சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் இரும்பு கம்பியிலான டோல் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரும்பு கேட் அமைத்த வனத்துறையினர். மாலை 6 மணிக்கு மேல் பழைய குற்றால அருவிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல். *ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஆகஸ்ட்.19 மின்தடை

image

வாசுதேவநல்லூர் பகுதிகளில் ஆகஸ்ட் 19ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2 மணி வரைதரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல் கட்டும் சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானை கோட்டை, மலையடிக்குறிச்சி மற்றும் தாருகாபுரம் பகுதிகளில் மின்தடை பணிகள் முடிந்த பின்பு சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!