Tenkasi

News October 1, 2024

சிவகிரியில் மின் இணைப்பு பெற லஞ்சம் வாங்கிய இருவர் கைது

image

தென்காசி மாவட்டம் சிவகிரியில் புதிய மின் இணைப்பு பெற 5000 ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி மின்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் மின் ஊழியர் மருது பாண்டி ஆகிய இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாரிமுத்து என்பவர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மின் இணைப்பு தர 35,000 லஞ்சம் கேட்டுள்ளார் உதவி மின்பொறியாளர் முத்துக்குமார்.

News October 1, 2024

தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் நேற்று(செப்.,30) வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்.,2ம் தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து மதுபானக் கூடங்களில் மதுபானம் விற்பனை ஏதும் இயங்காது. மீறி மதுபானம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News October 1, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு சோதனைக் காவலர் நியமனம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளிக்க வந்திருந்தனர். இந்நிலையில் 2 நபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு சோதனைக் காவலர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 30, 2024

மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி

image

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் நேற்று (செ.29)இரவு பெய்த காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அருவிகளில் குளிக்க தடை இன்று(செ.30) காலை தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது மெயின் அருவியை தவிர மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News September 30, 2024

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது விதி செலவீனம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ,தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வதை குறித்து விவாதித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

News September 30, 2024

துணை முதலமைச்சருக்கு தென்காசி எம்பி வாழ்த்து

image

தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீ குமார் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று(29ம் தேதி) மாலையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர்களுடன் உடன் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் பொறுப்புகள் இருந்தனர்.

News September 29, 2024

ரூ.7 லட்சம் செலவில் கலையரங்கம் திறப்பு விழா

image

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காவலாகுறிச்சி கிராமத்தில் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து திறந்து வைத்தார். உடன் மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News September 29, 2024

பரிசளிப்பு விழா ஒத்திவைப்பு -ஆட்சியர்

image

தென்காசி மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக இன்று நடைபெற இருந்த முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சியானது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிஷோர் நேற்று தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

தென்காசி மாவட்ட மாஜி மா.செ நன்றி

image

ஆலங்குளம் அருகே தெற்கு காவலாகுறிச்சி மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இரட்டை குளம் கால்வாய் திட்டத்திற்கு தற்போது ரூ 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவ பத்மநாதன் இன்று நன்றி தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

புளியங்குளத்தில் புதிய பள்ளி கட்டடம் கட்ட அடிக்கல்

image

புளியங்குளம் ஏபிஏசி நடுநிலைப்பள்ளிக்கு
ஏசிஇ மைக்ரோமெட்டிக் கம்பெனி சார்பில், சுமார் ரூ.15 லட்சம் சிஎஸ்ஆர் நிதி, ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ 21லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில் திருச்சி எம்பி துரை வைகோ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். துணைபொது செயலாளர் திமு. இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.