India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் அடைய வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை வடகரை வடகாடு பகுதியில் இருந்து சென்னா பொத்தை செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று பாறையில் படுத்து கிடப்பதைக் கண்ட இளைஞர்கள் அலறி அடித்து ஊர் திரும்பி உள்ளனர் மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை வடகரை வடகாடு பகுதியில் இருந்து சென்னா பொத்தை செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று பாறையில் படுத்து கிடப்பதைக் கண்ட இளைஞர்கள் அலறி அடித்து ஊர் திரும்பி உள்ளனர் மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருமலை குமாரசுவாமி கோயிலில் நாளை சந்திர கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மேல் மலை பாதைக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே நாளை (செப்டம்பர் 7) திருமலை கோயில் வரும் பக்தர்கள் மாலை 5 மணிக்குள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சத்யா என்பவர் இன்று தனது நண்பர்களுடன் ஆம்பூர் அருகே உள்ள பூவன் குறிச்சி கடனா ஆறு அணைக்கட்டு பகுதியில் குளித்த போது நீரில் மூழ்கி பலியானார். அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறை வீரர்கள் உடலை மீட்டு ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர் .
தென்காசி நகராட்சி உட்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் ஒரு பணியில் மிகப்பெரிய அளவில் முறையீடுகள் நடந்துள்ளன. எனவே உபயதாரர்கள் தாங்கள் வழங்கிய நன்கொடைகள், பணம், மற்றும் பொருட்கள் குறித்த விபரங்களை 9585090030 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு ஆலய சொத்து மீட்பு குழு சார்பில் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் சேவியர் என்ற மாற்றுத்திறனாளிக்கு சொந்தமான கொட்டகையில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்ப்பு வந்தார். இந்நிலையில் அவர் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பலி. கடந்த வாரம் இவரது கொட்டகையில் நாய்கள் கடித்ததில் 9 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தது, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை (செப். 7) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், மேலும் விவரங்களுக்கு 7397724825, 7397724853 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க. வேலைதேடும் நபர்களுக்கு உதவும்.
தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.