Tenkasi

News April 3, 2025

தென்காசி :தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

சங்கரன்கோவிலில்  ஏப்.5ம் தேதி காலை 10 மணிக்கு  தனியார் வேலை வாய்ப்பு முகாம் அபர்ணாதேவி மஹாலில் நடைபெற உள்ளது. இதில் 10,+2, பட்டயபடிப்பு, பட்டப்படிப்பு முடித்த 18 வயது மேலுள்ள ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். பணியில் சேருவோருக்கு தங்குமிடம் இலவசம். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள  9345799425 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

விவசாயிகள் அடையாள எண் பெற கால அவகாசம் நீட்டிப்பு

image

விவசாயிகள் தங்களது நில உடமைகளை பதிவு செய்து ஆதார் போன்ற அடையாள எண் பெறுவது அவசியம். இதற்கு மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கட்டாயம் அடையாள எண் பெற வேண்டும் என தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் இன்று (ஏப்ரல்-2) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் காவல்துறையினரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரை தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்று கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2025

தென்காசி: கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி கம்பங்கள் சமூகம் மதம் சங்கம் சம்பந்தமான கொடி கம்பங்களை 20/05/25-க்குள் தாங்களாகவே அகற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவ்வாறு தவறும் பட்சத்தில் அரசு முன்வந்து கொடி கம்பங்களை அகற்றும் எனவும்,  அதற்கான தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News April 2, 2025

பால் உற்பத்தியை அதிகரிக்க தென்காசியில் ஆலோசனை கூட்டம்

image

தென்காசி மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சங்கங்களின் முன்னேற்றத்தை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது நமது மாவட்டத்தில் செயல்படும் 73 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பால் நாளொன்றுக்கு சராசரியாக 12,000 லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தென்காசி:சுரண்டை நகராட்சி ஒப்பந்த புள்ளி அறிவிப்பு

image

சுரண்டை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூ.3 கோடியே20 லட்சம் ஆகும். இதற்கான விண்ணப்பங்களை பெற இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி நாள்17/04/25 ஆகும். ஒப்பந்தபுள்ளி முன் கலந்தாய்வு கூட்டம் 11/04/25 அன்று நடைபெற இருக்கிறது. *ஷேர் பண்ணுங்க*

News April 2, 2025

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்ரல்-2) நாளை (ஏப்.3) மற்றும் ஏப்ரல் -05 ஆகிய 3 நாள்களுக்கு தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 2, 2025

விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்காசி மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லினை அரசு நிர்ணயித்த விலையில் இடைத்தரகர்கள் இன்றி அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளார். அதற்குரிய தொகையினை நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தென்காசி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

image

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 11 ஆகிய இரு நாட்களும் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தர்பூது நடைபெற்று வரும் தேர்வுகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 2, 2025

இரண்டு குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு

image

தென்காசி, சேந்தமரம் அருகே உள்ள வலங்கப் புலி சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மனைவி மகேஷ் (34) குடும்பத் தகராறு காரணமாக கடந்த 28ஆம் தேதி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளார். உடனடியாக மீட்க்கப்பட்ட அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!