India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று (அக்.24) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவன நடவடிக்கை குழுவில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பழைய குற்றாலத்தில் வனத்துறையால் அமைக்கப்பட்ட செக் போஸ்டை அகற்றி மீண்டும் பழைய குற்றாலத்தை நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நிர்வாகி டேனி அருள்சிங் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நவம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ .வேலுவிற்கு நேற்று(அக்.,23)அனுப்பியுள்ள மனுவில், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி சந்தை அருகில் செல்லும் சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும். அதிக போக்குவரத்துக் கொண்ட சாலையாக இருப்பதால் சாலை பணிகள் நடைபெற்று ஓரிரு ஆண்டுகளிலேயே மிகவும் பழுதடைந்துவிட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
சங்கரன்கோவில் ரயில் பயணிகளின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார இறுதியில் பெங்களூரு, சங்கரன்கோவில் வழியாக செல்லும் ஹூப்ளி – கொல்லம் சிறப்பு இரயில் இயக்கப்படும். ஹூப்ளி – கொல்லம், 26-10-2024 சனி, கொல்லம் – ஹூப்ளி, 27-10-2024 ஞாயிறு அன்று இயங்கும். இந்த இரயில் வழித்தடமாக பெங்களூர், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி முன்பதிவு தொடங்கிவிட்டது
தென்காசி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், கட்டிடங்கள் கட்டு பணிகளும் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பாட்டா குறிச்சி பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளது. அந்த நிலத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் இன்று(அக்.23) பார்வையிட்டார்.
பாஜக தமிழக நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம்-நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில் திமுக MP ராணி ஸ்ரீ குமார்தான் பெற்றுக் கொடுத்தாக செய்திகள் வந்தன. அக்.,21 கடிதம் கொடுத்து அக்.,22 வெளியிட சாத்தியக்கூறுகள் கிடையாது. சிறப்பு ரயிலுக்கு கடிதம் கொடுத்ததை வரவேற்கிறோம். மக்களை ஏமாற்றும் செய்தி பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தின் நேற்று(அக்.22) பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையம் அருகே உள்ள ராமநதி அணையில் 30 மில்லி மீட்டர் மழை, கடனாநதி அணையில் 4 மில்லி மீட்டர், கருப்பாநதி அணையில் 9 மில்லி மீட்டர், குண்டார் அணையில் 22 மில்லி மீட்டர், அடவிநயினார் அணையில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக இன்று(அக்.23) மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – செங்கோட்டை இடையே முற்றிலும் குளிரூட்டப்பட்ட சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த விரைவு ரயில், திருவள்ளுவர், காட்பாடி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக மறுநாள் காலை செங்கோட்டையை வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது.
தென்காசி தெற்கு மாவட்டம் சொக்கம்பட்டியில் ஆரம்பம் சுகாதார நிலையங்கள் திறப்பு விழாவிற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(அக்.,23) வருகை தந்தார். அவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.