India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, ஆய்க்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு உலகம்மன் திருக்கோயில். நினைத்ததை வேண்டி விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். சித்திரை, பங்குனி நாட்கள் இங்கு சிறப்பு வாய்ந்த நாட்களாகும். இங்கு வேண்டினால் குழந்தை பிரச்சனை, கடன் பிரச்சனை , குடும்ப பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அந்த பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் சுகாதார உதவியாளர்கள் பணிக்கு மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவை இல்லை. விண்ணப்பிக்க <
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 05.04.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-5) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்துள்ளார் தொடர்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து சுரண்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான தென்காசி சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் இன்று ஒன்றிய, நகர, பேரூர் பொறியாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. திமுக நிர்வாகி எம்.பி.ராஜவர்மன் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL OFFICIAL APP), மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 94458 59032, 94458 59033, 94458 59034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் செல்போன் எண் 94987 94987 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை தொடர்பு கொண்டு புகார் தகவல்களை தெரிவிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று ஏப்ரல் 4 இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.