Tenkasi

News August 30, 2024

குண்டார் பகுதியில் 32 மி.மீட்டர் மழை பதிவு

image

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக செங்கோட்டை அருகே உள்ள குண்டார் அணை பகுதியில் 32 மி.மீட்டர் மழை, அடவிநயினார் அணை பகுதியில் 16 மிலிமீட்டர் மழை, கருப்பா நதியில் 1.5 மி.மீட்டர் மழை பதிவாக இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News August 30, 2024

பள்ளி கல்லூரி மாணவர்களுக்க பேச்சுப் போட்டி

image

தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,29) அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி செப்.,3 மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி செப்.,5 ஆகிய தேதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

News August 30, 2024

கடையநல்லூரில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம்

image

தென்காசி மாவட்ட நிர்வாகம், தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து இன்று கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார கல்லூரி மாணவ மாணவிகளுக்காக சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன் கேட்டுக்கொண்டார்.

News August 29, 2024

சுரண்டை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி

image

சுரண்டை அருகே வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவித்த இழப்பீடு தொகை தலா 2 இலட்சம் என மொத்தம் 6 இலட்சத்திற்கான காசோலையை
இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் ஆகியோர் வழங்கினர்.

News August 29, 2024

சுரண்டை விபத்தில் காயம் பட்டவர்களுக்கு நிவாரணம்

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோவில் விவசாய பணிக்கு சென்ற 14 பெண்கள் காயம் அடைந்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பழங்களும் மற்றும் தலா ரூ.5000-ம் வழங்கினர்.

News August 29, 2024

செப்.1 இல் சங்கரன்கோவிலுக்கு சீமான் வருகை

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், பூலித்தேவனின் 309 ஆவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி வருகிற செப்டம்பர் 1ம் தேதி மாலை 5 மணி அளவில் சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவலில் அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பல்வேறு துறைகள் சார்ந்த திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சின்ஜோங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், “பல்வேறு அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்; மக்கள் அதை பயன்படுத்த வேண்டும்” என சின்ஜோங்கம் பேசினார்.

News August 29, 2024

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

image

கடனா அணையின் உச்சநீர்மட்டம் 85, அடி நீர் இருப்பு 60.70 அடி, நீர் வரத்து 6 கன அடி, 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராமாநதி அணை உச்ச நீர்மட்டம் 84 அடி, நீர் இருப்பு 66.75 அடி, நீர்வரத்து 17 கன அடி, 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணை உச்சநீர்மட்டம் 72 அடி, நீர் இருப்பு 54.14 அடி, நீர் வரத்து 5 கன அடி, 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

News August 29, 2024

10 லாரிகள் சிறை பிடிப்பு; ரூ.8 லட்சம் அபராதம்

image

தென்காசி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன் உத்தரவுப்படி நேற்று(ஆக.,28) புளியரை பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 லாரிகளை பறிமுதல் செய்து ரூ.8 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.

News August 29, 2024

பழைய குற்றாலம் பிரச்சனை: கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்

image

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று(ஆக.,29) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மாவட்ட நிர்வாகம் பழைய குற்றால அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் முயற்சியை முற்றாக கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். தேவைப்படும் பட்சத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பாக அப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!