India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சிற்றாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட 23 விவசாய சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வேட்பு மனுக்களை தொடர்பு உடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற நவ.,27,28 தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம். 28ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, ஆலங்குளம் ஆகிய நான்கு உட்கோட்ட பிரிவுகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பட்டியலை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 என்ற எண்ணை அழைத்து தகவல் சொல்லலாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று (24.11.2024) 3-வது பொதிகை புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நாளை (நவ.25) காலை 10.30 மணி அளவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பாலின வன்முறைக்கெதிரான பிரச்சாரப் பேரணியை தொடங்கி வைக்க உள்ளார். பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் சென்று பாலின வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
பசியில்லா சங்கரன்கோவில் அமைப்பு நிறுவனர் சங்கர சுப்பிரமணியன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் ரத்ததானம் செய்தவர்களுக்கு ( குறைந்தது 15 தடவைக்கு மேல்) 7வது வருட துவக்கத்தை முன்னிட்டு ஜனவரி 1 முதல் மின்னணு சான்றிதழ் பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளையால் வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று(நவ.23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மாவட்ட தென்காசி உட்கோட்ட காவல்துறை பயிற்சி துணை கண்காணிப்பாளராக இருந்த தமிழ் இனியன், தென்காசி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த நாக சங்கர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
தென்காசி, சங்கரன்கோவிலில் பட்டதாரி இல்லத்தரசிகளுக்கான இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 24) தொடங்கவுள்ளதாக, பாஜக ஸ்டார்ட்அப் பிரிவு மாநிலத் தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் மேலரத வீதியில் உள்ள குருசாமி கோகுல் திருமண மகாலில் காலை 10 மணிக்கு முகாம் தொடக்க விழா நடைபெறவுள்ளது. முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று நிகழ்வை தொடங்கிவைக்கவுள்ளாா்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி சொந்தமான பேரறிவு பகுதியில் சந்தனம், குங்குமம் தற்காலிக கடை அமைத்திட நவ 2024 முதல் 2025 வரை உள்ள கால அளவிற்கு அனுபவித்துக் கொள்ளும் பொருட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலம் விடப்பட உள்ளது. குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் வருகிற 27ஆம் தேதி 10:30 மணிக்கு ஏலம் விடப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை – தாம்பரம், தாம்பரம் – செங்கோட்டை (20681,20682) வழித்தடங்களில் வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு அதி விரைவு ரயிலில் விடுமுறைக்காக கூட்ட நெரிசலை தடுக்கும் விதத்தில் கூடுதலாக 6 இணைப்பு பெட்டிகளை இணைக்க இருக்கிறது. மொத்தம் 23 பெட்டிகளுடன் நவ.27 முதல் ஜன.30ஆம் தேதி வரை கூடுதல் இணைப்பு பெட்டியுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பாக இன்று சென்னை நாரத கன சபா தேனாம்பேட்டை யில் வைத்து சிறப்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்ததற்காக முதலியார்பட்டியை சேர்ந்த கோதர் மைதீன் என்பவருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது. இதில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் கே. பாக்கியராஜ், மற்றும் ஆசிரியர், தொகுப்பாளர், நடிகர் ஈரோடு மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு விருது வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.