Tenkasi

News October 28, 2024

தென்காசியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் பெறப்பட்ட மனுக்களை உரிய நடவடிக்கைக்காக அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

News October 28, 2024

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி வழங்கல்

image

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 க்கான வைப்புத்தொகை இரசீதினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 28, 2024

வணிகர் சங்க நிர்வாகி மறைவு: வியாபாரிகள் இரங்கல்

image

சுரண்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கேடிகே காமராஜ், ஏடி நடராஜன், தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில், வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் முக்கிய நிர்வாகியும், நெல்லை மண்டல தலைவருமான எம்.ஆர்.எஸ்.சுப்பிரமணியன் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வணிகர்களுக்கு அவர் செய்த பணி அளப்பரியது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளனர்.

News October 27, 2024

தென்காசியில் புத்தக கண்காட்சி அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நவ.15 ஆம் தேதி முதல் நவ.24 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9:30மணி வரை தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி, புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. நிகழ்வில், அனைவரும் கலந்து கொள்ளுமாறு” அறிவுறுத்தப்பட்டுள்ளது

News October 27, 2024

தென்காசி மாவட்டத்திற்கு ஆதரவாக நடிகர் விஜய்?

image

நடிகர் விஜய்யின் கட்சியான த.வெ.க-வின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகின்றது. மாநாட்டில், அக்கட்சியின் கொள்கை மற்றும் செயல்த்திட்டங்கள் வாசிக்கப்பட்டன. அதில், “மணல் மற்றும் கனிமவளக் கொள்ளையை தடுக்க சிறப்பு பாதுக்காப்பு சட்டம் இயற்றப்படும்” என தெரிவித்துள்ளனர். சமீபமாக தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிமவளம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

News October 27, 2024

நிவாரணம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தேசிய நெடுஞ்சாலை 744 திருமங்கலம் -கொல்லம் நான்கு வழி சாலை பணிகளுக்காக நில உரிமையாளர்களிடம் நிவாரணம் வழங்குவதற்காக அக். 29 முதல் ஆவணங்கள் பெறும்பணி தொடங்குகிறது. 29 ஆம் தேதி கடையநல்லூர் வட்டம் சிந்தாமணி அருகே டிஎன் புதுக்குடி கிராமத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தங்களுக்குரிய நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

News October 27, 2024

தரமற்ற உணவு குறித்து புகார் அளிக்க எண் வெளியீடு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(அக்.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தீபாவளி பண்டிகை ஒட்டி கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம். அதற்கான பிரத்யேகமாக 94440-42322 என்ற எண் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

News October 27, 2024

நெல்லை, தென்காசி வழியாக சிறப்பு ரயில்

image

தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் நவ. 3ம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு தென்காசி வழியாக மறுநாள் சென்னை தாம்பரம் சேருகிறது. மறு மார்க்கத்தில் தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் நவ.4ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை தென்காசி வழியாக நெல்லை வந்து சேர்வதாக தெற்கு ரயில்வே இன்று(அக்.27) அறிவித்துள்ளது. SHARE IT

News October 26, 2024

சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை: தென்காசி CEO

image

தென்காசி மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று(அக்.,26) மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகள் செயல்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார். SHARE IT.

News October 26, 2024

இன்று சிறப்பு வகுப்புகள் வேண்டாம்: தென்காசி கலெக்டர்

image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று(26.10.2024) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று(26.10.2024) சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.