India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் நடந்த விஜயகுமார் படுகொலையை கண்டித்தும், நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை கண்டித்தும், அதனை தடுக்க புதிய சட்டம் ஏற்ற வலியுறுத்தியும் தென்காசி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் , வருகிற 11-ம் தேதி மாலை 4 மணி அளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (09.12.2024) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 41 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.58 கோடி மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகின்றது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் அதிக அளவில் வந்து மனு கொடுப்பதற்கு காத்திருக்கின்றனர். உள் அரங்கில் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடப்பதால் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு தாமதமாகின்றது. மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்ட பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தலாம் என மனு கொடுக்க வந்த பொதுமக்கள் புலம்புகின்றனர்.
தென்காசியில் மாவட்ட ஜெய் ஜவான் ராணுவ வீரர்கள் நலச்சங்க ஆண்டு விழா நேற்று(டிச.,8) நடைபெற்றது. இலஞ்சி சாரதாம்பா அரங்கில் நடந்த விழாவிற்கு கர்னல் ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் கேப்டன் சமுத்திரவேல் வரவேற்றார். தென்காசி பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் சுந்தர்ராஜ் சிறப்புரையாற்றினார். ராணுவ வீரர்கள் நல மையம் ராணுவ கேண்டின் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (டிச.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தென்காசி கனிமவளத்துறை உதவி இயக்குனராக வினோத் என்பவர் பணியாற்றி வந்தார். தென்காசி மாவட்டத்தில் கனிமவளக் குவாரியில் பிரச்சனைகள் இருந்து வந்ததைத் தொடர்ந்து இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிரடியாக வினோத் நீலகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதில் ஈஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் குறிப்பன்குளத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் ராமநாதன் என்ற ரமேஷ்(45). இவர் மின்வாரிய வயர்மேனாக பணி புரிந்து வருகிறார். இன்று காலை அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் பீஸ் போடும் போது எதிர்பாராதவிதமாக மின் சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவரான பாண்டியராஜா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு வருகிற 2027 பிப்ரவரி முதல் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் அறியும் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கொள்ளை அடித்து வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் நபர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு தென்காசி மாவட்ட காவல்துறை இன்று(டிச.08) விழிப்புணர்வு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கொள்ளை தடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நேற்று(டிச.07) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன் ஆகிய கடன்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.