Tenkasi

News January 18, 2026

தென்காசி : தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 18, 2026

தென்காசி: HI சொன்னா., இனி Whatsapp-ல் வங்கி விபரங்கள்

image

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க…

News January 18, 2026

தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 18, 2026

தென்காசி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

image

சிவகிரி அருகே தேவிப்பட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வைவரன் (60). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த அவர் நேற்று தனது வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 18, 2026

தென்காசி: பீர் பாட்டிலால் ஓட்டுநரின் மண்டை உடைப்பு

image

கடையம் அருகே வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேக் (30). மினி பஸ் டிரைவரான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மது பாரில் மது அருந்த சென்றார். அப்போது கிழ கடையம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (23) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் பீர் பாட்டிலால் சுவேக் தலையில் அடித்ததில், அவரது மண்டை உடைந்து தென்காசி GH-ல் அனுமதிக்கப்பட்டார். கடையம் போலீஸார் சரவணக்குமாரை கைது செய்தனர்.

News January 18, 2026

தென்காசி: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

தென்காசி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 18, 2026

தென்காசி: பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

சிவகிரி அருகே அருளாட்சி என்ற திருமால்புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் ராயகிரியில் உள்ள திருமண மண்டபம் அருகில் உள்ள பாலத்தில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 18, 2026

செங்கோட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

செங்கோட்டை, வல்லம் செல்லும் சாலையில் தனியார் எண்ணெய் மில் அருகில் உள்ள தனியார் தோட்டம் பகுதியில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு நிலையில் பிணமாக கிடப்பதாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 17, 2026

தென்காசி: இனி நீங்க வங்கி போக தேவை இல்லை!

image

தென்காசி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனி வங்கிக்கோ (அ) அடிக்கடி UPI-ஐ திறந்து பார்க்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 9076030001
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 17, 2026

தென்காசி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா?

image

தென்காசி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!