Tenkasi

News October 8, 2024

புதையல் ஆசைக்காட்டி 18 பவுன் நகை திருட்டு

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காந்தி தெருவை சேர்ந்தவர் முத்து செல்வம்(32). இவர் தனது அத்தை செல்லத்தாயிடம் உங்கள் வீட்டில் புதையல் இருக்கிறது, உங்கள் நகையை வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி 18 பவுன் நகையை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்து செல்வம் மற்றும் தனியார் நிதி நிறுவன ஊழியர் மாரி செல்வம்(36) ஆகியோரை போலீசார் நேற்று(அக்.,7) கைது செய்துள்ளனர்.

News October 8, 2024

ரூ.1.61 லட்சத்திலான நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

image

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமில், மூளை முடக்குவாதம், புற உலக சிந்தனையற்ற மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மென்பொருளையும் கூடிய உபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார். மேலும் ரூ.1.61 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News October 8, 2024

தென்காசி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (அக்.07) இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் உயர் அதிகாரிகள் விபரங்களை தென்காசி எஸ்பி சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட பகுதிகளில் போலீசார் உதவி தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

image

அக்டோபர் 12ஆம் தேதி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் அன்று மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News October 7, 2024

தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

image

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.,7) கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்த்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெசரிக்கையாக குடையுடன் செல்வது நல்லது.

News October 7, 2024

ஆளுநரை வரவேற்ற தென்காசி SP

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தென் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அந்த வகையில் நேற்று(அக்.,6) தென்காசி மாவட்டத்திற்கு வாய்ஸ் ஆப் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த கவர்னரை, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

News October 7, 2024

இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும்: MLA ராஜா

image

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா நேற்று(அக்.,6) விடுத்துள்ள அறிக்கையில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் கிராமங்கள்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். பொது மக்களிடம் உடல் தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News October 7, 2024

யாரிடம் புகார் தெரிவிக்கலாம் எஸ்பி அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று(அக்.06) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் உயர் அதிகாரிகள் விபரங்களை தென்காசி எஸ்பி சீனிவாசன் வெளியிட்டுள்ளார். மாவட்ட பகுதிகளில் போலீசார் உதவி தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

கவர்னரை வரவேற்ற தென்காசி மாவட்ட கலெக்டர்

image

தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவரை இன்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.‌‌

News October 6, 2024

நீச்சல் குளத்தில் குளிக்கச்சென்ற சிறுமி பலி

image

புளியங்குடி அருகே உள்ள ரத்தபுரியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகள் நான்காம் வகுப்பு படிக்கும் கன்சிகா(9). தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!