India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா நாளை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமை தாங்குகிறார். இதில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு நகர செயலாளர் பிரகாஷ் இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் (அக்.08) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் உயர் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது. மாவட்ட பகுதிகளில் போலீசார் உதவி தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரண்டை பகுதியில் நாளை தென்காசி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மாலை 4 மணிக்கு சுரண்டை பகுதியில் தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார் என்றார்.
வாசுதேவநல்லூர் வழக்கறிஞர் ஸ்டாலின், சரவணபுரம் அற்புதராஜ், வெள்ள கவுண்டம்பட்டி மங்கள் ராஜ் ஆகியோர் இன்று மாலை புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோரை நேரில் சந்தித்து தங்களை புதிய தமிழகம் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே துல்லியமாக அதிகாரபூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவரவர் ஆண்ட்ராய்டு அலைபேசி மூலம் அறிந்து கொள்ள TN-Alert App என்னும் செயலியை Google Play Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில், குதிரை மேல் அமர்ந்தவாறு வேலை கையில் ஏந்தியவாறு போருக்கு செல்வது போல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் வெண்ணிக்காலாடியார் வெண்கல உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாளை காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட மின் விநியோக மேற்பார்வை பொறியாளர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், இந்த மாதத்தில் மின் குறைதீர் கூட்ட முகாம்கள் தென்காசி மாவட்ட அளவில் வருகிற 8ஆம் தேதி தென்காசி மின் கோட்ட அலுவலகத்திலும், 15ஆம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 22ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் பகல் 11 மணி அளவில் நடைபெற உள்ளது. மின் நுகர்வோர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தனி தொகுதிக்கு பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு திமுக தலைமை தென்காசி முன்னாள் எம்பியும், விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான தனுஷ் எம்.குமாரை நியமித்துள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(அக்.,7) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழுக்கு தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் தமிழ் அறிஞர்கள் வருகிற 31 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலகரம் கிராமத்தில் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் ரயத்து மனை பட்டா பெறுவதற்கு நில உரிமையாளர்கள் நில அளவை அதிகாரிகள் நில அளவை செய்யும்போது உடனிருந்து அவரவர் இடங்களை காண்பிக்க வேண்டும். பத்திரப்பதிவு ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய அலுவலர்களால் புலப்பரிசீலனை மேற்கொண்டு பட்டா வழங்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.