Tenkasi

News October 14, 2024

தென்காசியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

image

தென்காசி, சின்னக் கோவிலான்குளத்தில் நேற்று இளைஞர்கள் குழு சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றிபெற்ற கரிவலம்வந்தநல்லூர் அணிக்கு முதல் பரிசு ரூ.5,001ஐ திமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பெரியதுரை வழங்கினார். விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெள்ளத்துரை, மகாராஜன், செந்தில்குமார், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News October 14, 2024

சங்கரன்கோவில் மருத்துவமனையில் MLA ராஜா ஆய்வு

image

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ராஜா எம்எல்ஏ நேற்று(அக்.,13) மாலையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கான கூடுதல் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News October 14, 2024

எம்எல்ஏ பழனி நாடாருடன் திக நிர்வாகிகள் சந்திப்பு

image

சுரண்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று(அக்.,13) மாலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி எம்எல்ஏவுமான எஸ்.பழனி நாடாரை தென்காசி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வீரன் தலைமையில் சந்தித்து பேசினர். அப்போது பெரியார் பிறந்தநாள் விழா கூட்டம் தொடர்பாக ஆலோசனை செய்தனர். உடன் திமுக நிர்வாகிகள் முத்துக்குமார், பூல் பாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர்.

News October 13, 2024

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.

News October 13, 2024

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி – போலீஸ் எச்சரிக்கை

image

தென்காசி மாவட்ட காவல்துறை நேற்று (அக்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமீப காலமாக டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி நடைபெற்று வருகிறது. உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி போன் வந்தால் அதனை நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

News October 13, 2024

ஆலங்குளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

image

உங்களுக்கு தேடி உங்கள் ஊரை திட்டம் என்ற திட்டத்தின் படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் ஏழாம் கட்டமாக வரும் 16ஆம் தேதி 9 மணி முதல் 17 ஆம் தேதி ஒன்பது மணி வரை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக எழுதி பயன் பெறலாம் என நேற்று(அக்.12) கேட்டுக் கொள்ளப்பட்டது.

News October 13, 2024

தென்காசி அருகே காவல்துறையினர் விழிப்புணர்வு முகாம்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் இன்று அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போதை பொருள் ஒழிப்பு, போக்சோ, குழந்தை திருமணம், பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்கள், கண்காணிப்பு கேமிராக்கள் & சைபர்கிரைம்குற்றங்கள் தொடர்பான உதவிஎண் 1930 மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவி எண் 98840-42100 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News October 12, 2024

இரவு நேர பணியில் காவல் அதிகாரிகளின் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு தென்காசி ஆலங்குளம் புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோது பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்திற்கு பொதுமக்கள் அவர்களை தொலைபேசியில் அழைக்கலாம் அல்லது 100 ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News October 12, 2024

கனரக வாகனங்களுக்கு வரி விதிக்க வேண்டும்: முன்னாள் MLA

image

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 24.07.24 அன்று தீர்ப்பளித்தது. ஆனால் 3 மாதங்களாகியும் இதுவரை தமிழக அரசு வரி விதிக்காமல் உள்ளது. எனவே விரைவில் வரி விதிக்க வேண்டும் என தென்காசி முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் இன்று வலியுறுத்தி உள்ளார்.

News October 12, 2024

தெனகாசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று(அக்.,12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

error: Content is protected !!