Tenkasi

News May 2, 2024

தென்காசி நகராட்சி சேர்மனுடன் சந்திப்பு

image

தென்காசி நகராட்சியில் இன்று மமக 21வது கிளையின் சார்பாக நகராட்சி கவுன்சிலர் அபுபக்கர் தலைமையில் நகராட்சி சேர்மன் சாதிரை நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது, சொர்ணாபுரம் ரோடு மாட்டு அருப்பு நிலையம் கீழ்புறம் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தனர்.

News May 2, 2024

தென்காசி: நகராட்சி சேர்மன் வேண்டுகோள்

image

தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர் மே1ல் வெளியிட்ட அறிக்கை: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நீா்வள ஆதார அமைப்புகளில் குடிநீா் இருப்பு மிக குறைவாக உள்ளது. மேலும், பருவமழையும் சரியாக பெய்யாததால் நகராட்சியிலுள்ள வாா்டுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட்ட குடிநீரையும் தற்போது சீராக வழங்க இயலவில்லை.
எனவே, தென்காசி நகர பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்

News May 1, 2024

மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு

image

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கான இலவச tnpsc மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மே 2ஆம் தேதி மற்றும் மே 3ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சங்கரன்கோவில் கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

News May 1, 2024

தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுது!

image

தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் 95 கேமராக்கள் பழுதாகியுள்ளது . திடீரென இடி, மின்னல் ஏற்பட்டதால் கேமரா பாதிப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பாதிப்பை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

News May 1, 2024

தென்காசி: குடிநீர் சேவை கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதற்கான கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295891 மற்றும் 8148230 265 என்று தொலைபேசி எண்களிலும், சுகாதார குறைபாட்டிற்கு 96 00212 764 என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

தென்காசி: குடிநீர் சேவை கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மே, ஜூன் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதற்கான கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண் 04633 295891 மற்றும் 8148230 265 என்று தொலைபேசி எண்களிலும், சுகாதார குறைபாட்டிற்கு 96 00212 764 என்ற எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை

image

தென்காசி மாவட்டத்தில் வழக்கத்தைக் காட்டிலும் நிகழாண்டில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 15 நிமிடங்கள் கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.

News April 30, 2024

தென்காசி: எஸ்பி பாராட்டு

image

தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. விழாவில் எஸ்எஸ்ஐ மனோகரன், மற்றும் விருப்ப ஓய்வில் செல்லும் எஸ்எஸ்ஐ உமா மகேஸ்வரி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

News April 30, 2024

தென்காசி புகழ் திருமலை குமாரசுவாமி கோவில்!

image

பண்பொழி அருகேயுள்ள திருமலை குமாரசுவாமி கோவில் தேவார வைப்புத்தலமாகும். மேற்குத் தொடர்சி மலைத்தொடரில் உள்ள குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடப்பெற்ற இத்தலத்தில், ஆரம்பத்தில் வேல் மட்டும் வைத்து வழிபட்டிருக்கின்றனர். மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்த குளம் பூஞ்சுனை என அழைக்கப்படுகிறது. முருகன் தலமாக இருந்தாலும், தீர்த்தக்கரையில் சப்தகன்னிமார்கள் இருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

News April 29, 2024

தென்காசி அருகே விபத்து; இருவர் மரணம்

image

சங்கரன்கோவில் அருகே திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தண்ணீர் நிரம்பிய குழியில் கார் விழுந்ததில் தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது,சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் விலக்கு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் நிரம்பிய குழியில் கவிழ்ந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.