India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (அக்.26) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (அக்.25) நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகித்து விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் காந்தியடிகள் பிறந்த நாளை ஒட்டி வரும் நவம்பர் 12ஆம் தேதியும், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை ஒட்டி வரும் 14ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (அக்.25) கேட்டுக்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய மாவட்ட இயக்குநர் ராஜேஸ்வரி இன்று(அக்.,25) விடுத்துள்ள அறிக்கையில், தென்காசி மாவட்ட கிராமப்புறங்களில் வசிக்கும் 19-45 வயது வரை உள்ள ஆண்களுக்கு மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய கைப்பேசி பழுது நீக்குதல் குறித்த பயிற்சி இலத்தூர் ஐஓபி ஊரக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 30 நாள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 75025 96668 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
தென்காசி மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்கள் பகுதி வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். நெல்லையிலிருந்து தென்காசி சங்கரன்கோவில் வழியாக வாரம் ஒரு முறை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் கொல்லத்திலிருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக வரும் 27ஆம் தேதி ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம், மேட்டூர் ரயில்வே நிலையத்திற்கு இடையே கணக்கு நாடார்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் அயோத்தி என்பவர் ரயில் முன்பு பாய்ந்து இன்று(அக்.,25) அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீசார், உதவி ஆய்வாளர் மாரித்து தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்களான மாவட்ட திமுக செயலாளர்கள் தஞ்சாவூர் சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தளி பிரகாஷ் எம்.எல்.ஏ மயிலை த.வேலு எம்.எல்.ஏ மற்றும் மு.பெ. கிரி எம்எல்ஏ ஆகியோர்களை இன்று (அக்.24) முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவ பத்மநாதன் நேரில் சந்தித்து தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வழங்கினார்.
தென்காசி மாவட்டத்திற்கு இன்று (அக்.24) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவன நடவடிக்கை குழுவில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பழைய குற்றாலத்தில் வனத்துறையால் அமைக்கப்பட்ட செக் போஸ்டை அகற்றி மீண்டும் பழைய குற்றாலத்தை நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நிர்வாகி டேனி அருள்சிங் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நவம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ .வேலுவிற்கு நேற்று(அக்.,23)அனுப்பியுள்ள மனுவில், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி சந்தை அருகில் செல்லும் சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும். அதிக போக்குவரத்துக் கொண்ட சாலையாக இருப்பதால் சாலை பணிகள் நடைபெற்று ஓரிரு ஆண்டுகளிலேயே மிகவும் பழுதடைந்துவிட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.