Tenkasi

News January 7, 2025

தென்காசி அரசு மருத்துவமனைக்கு முதலிடம்

image

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நல பிரிவில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்து தேசிய அளவில் வழங்கப்படும் LAQSHYA, MUSQAN சான்றினை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான ஆய்வு  முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தென்காசி மருத்துவமனை தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது

News January 7, 2025

தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

image

பகுஜன் சமாஜ் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம். பகுஜன் சமாஜ் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளராக கடையம் பகுதியை சேர்ந்த மு.கஜேந்திரன் என்பவர் இருந்து வந்தார். இந்நிழலையில், அவர் கட்சியின் விதிமுளைகளை மீறியதாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து கட்சியின் மாநில தலைமை உத்தரவின் பேரில் மாநில செயலாளர் தேவேந்திரன் நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

News January 7, 2025

அமைச்சர் நேருவிடம் மு.மா. திமுக செயலர் கோரிக்கை

image

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் இன்று (ஜன.7) நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சர் நேருவை சந்தித்து மனு அளித்தார். அதில் கடையநல்லூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென தெரிவித்திருந்தார். அப்போது மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், காசி தர்மதுரை சுதா மோகன்லால்,சாமி துரை, ஸ்டீபன் சத்யராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

News January 7, 2025

கடையம் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கும் கலெக்டர்

image

தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் வரும் சனிக்கிழமை(11ஆம் தேதி) அன்று பள்ளி ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்துகொள்ள உள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

கடையம்: ஊத்து மலை இளைய ஜமீனுக்கு மா.செ. அழைப்பு

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரவண சமுத்திரத்தை சேர்ந்தவரான, முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க மாவட்ட செயலாளர் சலீம் இல்ல விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று(ஜன.6) ஊத்து மலையை சேர்ந்த இளைய ஜமீன் முரளி ராஜாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றார். இதில் கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News January 7, 2025

தென்காசியில் ஆர்ப்பாட்டத்திற்கு தயார் நிலை

image

தமிழக ஆளுநருக்கு எதிராக இன்று(ஜனவரி 7) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு தென்காசி நகர் மன்ற தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும ரயில்வே நிலையம் பகுதியில் ஏற்பாடுகளை பார்வையிட்டனர். இதில் ஏராளமான திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News January 7, 2025

தென்காசியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு கூட்டம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(06.01.2025) மாலையில் திடக்கழிவு மேலாண்மை, நெகிழி கழிவு மேலாண்மை மற்றும் மருத்துவக் கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை வகித்து பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பேசினார்.

News January 7, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (06.01.2025) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பட்டியலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொலைப்பேசி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633-295455, 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 6, 2025

20 ஆண்டு அனுபவம் மிக்க தென்காசி எஸ்.பி. 

image

தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி. அரவிந்த் 21.07.2005 ஆம் ஆண்டு பணியில் இணைந்தார். தொடர்ந்து, டி.எஸ்.பி.யாக திருவாரூர், கரூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவிலும், போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக சென்னையிலும், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளராகவும், திருப்பூர் மாநகரம், நுண்ணறிவு பிரிவு சென்னை, திருச்சி காவல் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்

News January 6, 2025

தென்காசி மாவட்ட பாஜக தலைவருக்கான தேர்தல்

image

பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி மாவட்ட தலைவருக்கான தேர்தல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று(ஜன.6) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரி சோலையப்பன், மாவட்ட பார்வையாளர் ராஜா, மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜ், மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமநாதன், அருள்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

error: Content is protected !!