Tenkasi

News February 7, 2026

தென்காசி: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு; மர்ம நபருக்கு வலைவீச்சு

image

பாம்புகோவில் சந்தை பகுதியை சேர்ந்த தம்பதி மாரியப்பன் – பார்வதி. இருவரும் நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிற்கு சென்ற நிலையில் பார்வதியின் தாயார் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி பீரோவில் இருந்த 26 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து CCTV அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

News February 6, 2026

தென்காசி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

image

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 6, 2026

தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து தென்காசி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க

News February 6, 2026

தென்காசி உள்ளுரில் வேலை வேணுமா? – APPLY NOW…!

image

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் அளவிலான கூட்டமைப்புகளால் வழங்கப்படும் தகுதியான நபர்கள் மூலம் வெளியாதார வட்டார முறையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம். 06.02.2026 முதல் 16.02.2026 அன்று மாலை 5மணி வரை சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும். ஷேர்.!

News February 6, 2026

தென்காசியில் வாகனம் கவிழ்ந்து விபத்து

image

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து வீரகேரளம்புதூருக்கு இன்று காலையில் லோடு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இலந்தை குளம் கரையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென அருகே இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 6, 2026

தென்காசி : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

image

தென்காசி மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் எண் பதிவு செய்து ஐடி உருவாக்குங்க. பின்னர் காலேஜ் ஐடி, மார்க் ஷீட், T.C போன்ற விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இந்த அருமையான தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க….

News February 6, 2026

தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 6, 2026

தென்காசி மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை…!

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை ஊராட்சி எஸ் வளைவு பகுதியில், மாவட்ட காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்: கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவோ அல்லது வேறு கழிவோ கொண்டு வந்தால் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். என்று தெரிவிக்கபட்டுள்ளது.

News February 5, 2026

தென்காசி: டூவீலர் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

image

வள்ளியம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (24). கட்டட தொழிலாளியான இவர் திங்கட்கிழமை இரவு கடையநல்லூரில் இருந்து வள்ளியம்மாள்புரம் நோக்கி டூவீலரில் சென்றார். அச்சம்ப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த ஆம்னி வேன் இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

தென்காசி மாவட்ட முக்கிய காவல் நிலைய எண்கள்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய காவல் நிலைய எண்கள் கீழே உள்ளன;
தென்காசி: 04633-222278
செங்கோட்டை: 04633-233274
சுரண்டை: 04633-261110
வி.கே.புதூர்: 04633-277125
குற்றாலம்: 04633-283137
ஆலங்குளம்: 04633-270140
குருவிகுளம்: 04632-251940
பாவூர்சத்திரம்: 04633-250244
ஆய்குடி: 04633-267153
அச்சன்புதூர்: 04633-237152
இலத்தூர்: 04633-280123
புளியரை: 04633-285132
இந்த தகவலை SAVE மற்றும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!