India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சமத்துவ நாள் உறுதிமொழி இன்று (ஏப்.12) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, அனைத்து நிலை அரசு அலுவலர்களும், தங்களது அஞ்சல் வாக்கினை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சேவை மையத்தில் (Facilitation Centre) நேரில் செலுத்தும் பணியினை, இன்று (ஏப்.12) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டார்.
திருப்புவனம் அருகே பழையனூரை சேர்ந்த ராஜ்(70), ஈஸ்வரி(65), இவர்களுக்குள் நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(ஏப்.11) ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரி கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜ்(70) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பழையனூர் போலீசார் ஈஸ்வரியை(65) கைது செய்து விசாரிக்கின்றனர்.
சிவகங்கை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்களுக்கு சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நேற்று முட்டை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் பகுதியை சேர்ந்த வில்வமூர்த்தி (55) மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் முன்னாள் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் பணி செய்த காலத்தில் கோவில் கணக்கிலிருந்து ரூ.40 லட்சத்தை மற்றொரு தனிநபர் கணக்கிற்கு மாற்றியுள்ளார். இதுகுறித்து தற்போதைய உதவி ஆணையர் குணசேகர்(50) கொடுத்த புகாரின் பெயரில் திருப்புவனம் போலீசார் வில்வமூர்த்தி (55) மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நாளை சிவகங்கை வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து காரைக்குடியில் மேற்கொள்ளவிருந்த சாலை பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமயம் கோட்டை பெருமாள் கோவிலில் அவர் வழிபாடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பிற தொகுதியைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அரசு விடுமுறை என்பதால் ஏப்ரல் 12, 13, 15 ஆகிய தினங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தங்களது அஞ்சல் வாக்கினை செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.