India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டி இவர் சிங்கப்பூரில் இருந்து வந்து சிவகங்கை அருகே வாணியங்குடியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டியவீட்டில் மருது பாண்டியர்கள் சிலை வைத்துள்ளார். இன்று வீட்டிற்கு பால் காய்ச்சும் விழா நடக்க இருந்த நிலையில் சிவகங்கை போலீசார் வந்து சிலையை அகற்றிவிட்டு பால் காய்ச்சும்படி கூறியிருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் யோகநிலையில் மூலவர் பைரவருக்கு ஜெயந்தன் பூஜை நடைபெற்றது. நேற்று காலை பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். இரவில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் யோக பைரவர் திருவீதி உலா வந்தார்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.21) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL2, FL3 / FL3A / FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் மற்றும் ஹோட்டல்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்று சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி நிலவரப்படி மொத்தமாக 63.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை பதிவை செய்து வருகின்றனர்.
சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம், காரைக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மதியம் 12 மணி நிலவரப்படி 24.47 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் இன்று காலை 8 மணி அளவில் கல்லல் அருகே அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் பனங்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில்
பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் தி.தேவநாதன் யாதவ் சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்திலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று (19.04.2024) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது வாக்கினை செலுத்தினார்.
சிவகங்கை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவு தொடர்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளும் பணிகளை அம்மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிப்பு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Sorry, no posts matched your criteria.