India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டாடும் வகையில் பட்டாசு விற்பனை நடைபெற்றது. கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் “கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை கேஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை பகுதியில் 6.00 மில்லி மீட்டர் மழைப்பதிவும் தேவகோட்டை பகுதியில் 1.80 மில்லிமீட்டர் மழைப்பதிவும் திருப்பத்தூரில் 5.40 மில்லி மீட்டர் மழை பதிவும் நேற்று 6:00 மணி முதல் இன்று(நவ.08) 6.00 மணி வரை மொத்தமாக 13.20 மில்லி மீட்டர் மழை பதிவும் சராசரியாக 1.47 மில்லிமீட்டர் மழைப்பதிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் தீபாவளிக்கு பிறகு தொடர்ந்து 3 கொலை சம்பவங்கள் நடந்ததால் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணனை சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும், எஸ்.ஐ., வைரமணியை திருக்கோஷ்டியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருக்கோஷ்டியூரில் பணிபுரிந்த எஸ்.ஐ., சஜீவ்வை சிவகங்கை நகருக்கும் மாற்றியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 39 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக 27 பேர், பாலியல் வழக்கு தொடர்பாக 3 பேர், கஞ்சா வழக்கு தொடர்பாக 1, மது விற்பனை தொடர்பாக 5, திருட்டு தொடர்பாக 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் சிறந்து விளங்கிடும் வகையில், ஆயத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,உதவி இயக்குநர் அல்லது 04575-240848, 93453 61068 என்ற தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் வருகின்ற 09.11.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழ்வாணியங்குடி பைனான்சியர் மணிகண்டன் கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைதான நிலையில் ஒன்பதாம் நபராக சிவகங்கை NGO காலணியை சேர்ந்த சிங்கமுத்து (28) என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். மேலும் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்ததில் இடது கை முறிவு ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாணியங்குடி பகுதியில் மணிகண்டன் மற்றும் மாத்தூரில் லட்சுமி என்ற மூதாட்டியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரு கொலை வழக்குகளிலும் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தவம் (எ) முத்துராமலிங்கத்தை(41) போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளியன்று 2 கொலைகள் நடைபெற்றன. இதில் கீழ்க்குளத்தைச் சேர்ந்த தவம்(41) என்பவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரைக் கண்காணிக்க தவறியதற்காக சிவகங்கை நகர் தாலுகா தனிப்பிரிவு போலீசார் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதோடு மதகுப்பட்டி இளையான்குடி பூவந்தி தனிப்பிரிவு போலீசாரும் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கல்லலில் இன்று (நவ.7) கோபால் மனைவி முத்துலெட்சுமி என்பவர் கல்லல் தெப்பக்குளத்திற்கு குளிக்க வந்தபோது எதிர்பாரத விதமாக குளத்தில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.