India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமீபத்தில் ராணுவத்தினை மையப்படுத்தி வெளியான அமரன் திரைப்படம் மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகங்கை யாழினி திரையரங்கில் அமரன் திரைப்படம் காண வந்த 20 ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டியும் சல்யூட் செய்தும் மரியாதை செலுத்தினர். மேலும் அன்றைய தினம் ராணுவத்தில் மறைந்த வீரருக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைக்க தேவையான வல்லுநர் விதை, ஆதாரநிலை மற்றும் சான்று நிலை நெல் விதைகளை வட்டார விரிவாக்க மையங்களில் பெறலாம். இது தவிர சிறுதானியங்களான குதிரைவாலி, கேழ்வரகு, பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள் ஆகிய ரகங்களில் விதைப்பண்ணை அமைக்க இருக்கும் விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம், என வேளாண்மை துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் இந்நிலையில், தென்மாவட்டங்களின் சில இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. தற்போது பெரும்பாலான வடமாவட்டங்களுக்கு வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திற்கும் மழை எச்சரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ.20க்குள் பதிவு செய்ய வேண்டும். மருந்தகத்திற்கு விண்ணப்பிப்பவர்களிடம் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது; 2023-2024ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டம் குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சிங்கம்புணரி அ.காளப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, திருப்புவனம் பழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளன என்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம்/முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற 16.11.2024 17.11.2024, 23.11.2024, 24.11.2024 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் இன்று (நவ -9) தெரிவித்துள்ளார்
2024-2025 ஆம் நிதியாண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் & பட்டியல் இனமக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்யும் ஆதிதிராவிடர் இனத்தைச்சார்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர், சிறந்தோர்க்கு 2025 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாளன்று விருதுகள் வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. நவ.20 தேதிக்குள் இதற்குவிண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்
காரைக்குடியில் சிவகங்கை எம்.பி கார்த்திக் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது விஜய் வருகையால் திமுக, அதிமுகவுக்குப் பாதிப்பு இருக்காது.நேரடியாக விஜய் கட்சி சீமானைத்தான் பாதிக்கும். ஏனென்றால் அவருக்கு என்று நிரந்தர வாக்கு வங்கி இல்லை. அடுத்து தேமுதிக பாதிக்கப்படும். அடுத்து பாஜக என்ற கட்சியை தாண்டி அண்ணாமலை அதிரடியாகப் பேசுவதால் ஒரு கூட்டம் அவர் பின்னால் இருந்தது. அதுவும் உடையும் என்றார்
சமூக மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தேச விரோதிகள் என அவதூறு பரப்பும் பாஜக மாநில நிர்வாகி எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (08.11.2024) நடைபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், ஓய்வூதியதாரர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்எஸ்.செல்வசுரபி உட்பட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.